search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chetan kumar"

    • கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சேத்தன் குமார்.
    • இவர் இந்துத்துவா குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சேத்தன் குமார் இந்துத்துவா குறித்து பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர் தனது சமூக வலைதளத்தில், " இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது. ராவணனை வீழ்த்தி ராமன் அயோத்தியா திரும்பியதில் இருந்து இந்திய நாடு என்பது தொடங்குகிறது என்ற கருத்து ஒரு பொய். 1992: பாபர் மசூதியே ராமரின் பிறப்பிடம் என கூறியது ஒரு பொய். 2023: உரிகவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோர் திப்புவை கொன்றவர்கள் என்றதும் ஒரு பொய்" என தெரிவித்துள்ளார்.


    சேத்தன் குமார்

    மேலும், அதில், இந்துத்துவாவை உண்மையால் வீழ்த்த முடியும். சமத்துவம் என்பதே உண்மை என சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் பெங்களூரு, சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்து உள்ளார். இந்நிலையில், கன்னட நடிகர் சேத்தன் குமாரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சேத்தன் குமார்.
    • இவர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு தேவை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சேத்தன் குமார், இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்திய கிரிக்கெட் அணியின் 70% பேர் உயர்சாதிகளை சேர்ந்தவர்கள். இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு இருப்பதை போல் கிரிக்கெட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும்.

     

    சேத்தன் குமார்

    சேத்தன் குமார்

    பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி சாதிகளில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களின் ஆட்ட திறன் சிறப்பாக இருக்கும். தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு குழுவிலும் இடஒதுக்கீடு தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது நடிகர் சேத்தன் குமாரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ×