என் மலர்
சினிமா செய்திகள்
- பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்.
- இவர் கதை ஒன்றை எழுதி முடித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான். இவர் தற்போது கதை ஒன்றை எழுதி முடித்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் பெயரிடப்படாத கிளாப் போர்ட் மற்றும் கதை எழுதிய புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு "கதை எழுதி முடித்துவிட்டேன்.. ஆக்ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்யன் கான்
இதற்கு, " யோசித்தது.. நம்பியது.. கனவு கண்டது நடந்தது.. முதல் ஒன்றுக்கு எனது வாழ்த்துகள். அது எப்போதும் சிறப்பானது." என்று நடிகர் ஷாருக்கான் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்யன்கான் பதிவு
இந்த கதையானது வெப்தொடரின் கதை என்றும் 2023-ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார்.
- பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

திஷா பதானி
இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

திஷா பதானி
நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
- தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண்.
- யாத்திரைக்காக தயார் செய்யப்பட்ட வாகன புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வருகிற ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய யாத்திரை செல்கிறார். நடிகர் பவன் கல்யாண் யாத்திரைக்காக ராணுவ கவச வாகனம் போல பிரத்யேக வாகனம் ஒன்று தயார் செய்யப்படுகிறது. இதற்கு வாராஹி என பெயரிட்டுள்ளனர். சப்த கன்னிகளில் வாராஹி அனைத்து திசைகளையும் காக்கும் தெய்வம். இதனால் அந்த வாகனத்திற்கு வாராஹி என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனம் குறித்த படங்களை பவன் கல்யாண் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஐதராபாத்தில் தயாராகி வரும் வாராஹி வாகனத்தை நடிகர் பவன் கல்யாண் நேற்று ஆய்வு செய்து, அதை வடிவமைக்கும் தொழில்நுட்ப நிபுணர்களிடம் சில ஆலோசனைகளையும் வழங்கினார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர் பாதுகாப்பு நடவடிக்கையுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாணின் சுற்றுப்பயணத்தின் போது ஆளுங்கட்சி மின்விளக்குகளை அணைக்க வாய்ப்பு உள்ளது. எனவே வாகனத்தில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வாகனத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் பவன் கல்யாண் மற்றும் 2 பேர் அமர்ந்து செல்வதற்கு இடம் உள்ளது. ஆந்திர மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் வாராஹி வாகனத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்படும் அதன் பிறகு பவன் கல்யாண் சுற்றுப்பயணத்திற்கு வாராஹி வாகனம் பயன்படுத்தப்படும். பவன் கல்யாண் யாத்திரையின் போது ஆளும் கட்சியான ஜெகன் ரெட்டி கட்சியின் பல்வேறு முறைகேடுகள் அரசாங்கத்தின் தோல்விகளை அம்பலப்படுத்த உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். பவான் கல்யாணின் வாராஹி வாகன படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் -2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், 'இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மகேஷ் நாராயணன்
இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது. இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மகேஷ் நாராயணன் - கமல்ஹாசன் இணைய இருந்த படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
- முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
- இவர் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் மலை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

மலை
இந்நிலையில் மலை படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். லக்ஷ்மி மேனன் மற்றும் யோகிபாபு இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர் படத்தின் ஒரு சிறிய தொகுப்பை உள்ளடக்கியது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் 'ஃபர்ஹானா'.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஃபர்ஹானா
மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ஃபர்ஹானா
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஃபர்ஹானா படத்தில் இரண்டாவது பாடலான 'சாரா' பாடல் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Get Ready to listen #Zara, second single from #Farhana on 12-12-22 at 5 pm !
— DreamWarriorPictures (@DreamWarriorpic) December 7, 2022
A @justin_tunes Musical
🎙️: @goldiesohel
✍🏽: @YugabhaarathiYb
In Theatres From Jan 26 @aishu_dil @selvaraghavan @nelsonvenkat @prabhu_sr pic.twitter.com/7mALSIEEjc
- ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா.
- இவர் தற்போது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படத்தை இயக்கியுள்ளார்.
ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக இருக்கிறது.

சர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம் கோபால் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என புரமோஷனை ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது.
ராம் கோபால் வர்மா, டேஞ்சரஸ் படத்திற்காக விதவிதமாக விளம்பரப்படுத்தி வருகிறார். படத்தின் நடிகையுடன் ராம் கோபால் வர்மா வினோதமான செயல்களைச் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.

அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் கவர்ச்சியாக உருவாகி உள்ள டேஞ்சரஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் வீடியோவை ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். அதில், நடிகையின் உடலில் ஆபத்தான குறியீடு எங்கே என்பதை கேட்பது போல கேமராவைப் பார்க்கிறார். பிறகு நடிகையின் பாதத்தை கடிப்பது போன்று அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த ஆபாசமான செய்கை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தனது படத்தை விளம்பரப்படுத்த இப்படி ஒரு செயலைச் செய்ததால் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.

தங்கலான்
இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

விக்ரம் - பா.இரஞ்சித்
இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விக்ரமும் பா.இரஞ்சித்தும் இடம்பெறும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Wishing the versatile creator of thought-provoking films, #PaRanjith sir, a very happy birthday From team #Thangalaan#HappyBirthdayPaRanjith #HBDPaRanjith#ChiyaanVikram @Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ pic.twitter.com/iJ4CG0YmEC
— Studio Green (@StudioGreen2) December 7, 2022
- இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
- சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட்டைக்காளி வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பி.சி.ஸ்ரீராம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளார். அதில், நான் பணியாற்ற உள்ளேன்.ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் தமிழ்செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'விழித்தெழு'.
- ஆன்லைன் சூதாட்டத்தை மையக்கருத்தாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் தமிழ்செல்வன் இயக்கத்தில் ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் சார்பில் சி.எம்..துரை ஆனந்த் தயாரித்துள்ள படம் 'விழித்தெழு'. இணையதள மோசடியை மையக்கருத்தாக கொண்டு உருவாகியுள்ள இந்த ப்டத்தின் கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ நடித்துள்ளனர்.
மேலும் பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விழித்தெழு படத்தின் இசையமைப்பாளராக நல்லதம்பியும், படத்தொகுபாளராக எஸ்.ஆர்.முத்துக்குமார் பணியாற்றியுள்ளனர். இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
- ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி ‘ரத்தசாட்சி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.
தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' எனும் சிறுகதையை தழுவி 'ரத்தசாட்சி' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

ரத்தசாட்சி படக்குழு
'ஆஹா தமிழ்' ஓடிடி தளத்தில் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் கண்ணா ரவி கூறியதாவது, இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தப்படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஜெயமோகன் சாரின் இந்தக்கதை அட்டகாசமானது. அதை இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது. இப்படத்தில் எனக்கு ஒத்துழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படத்தை எடுக்க ஒப்புகொண்ட அல்லு அரவிந்த் சாருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கவரும் என்றார்.

ரத்தசாட்சி படக்குழு
இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் கூறியதாவது, ஜெயமோகன் சார் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
- பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
- இவர் தமிழ் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தைப் பார்த்து அவருக்கு ரசிகை ஆகிவிட்டேன். விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

ஜான்வி கபூர்
'நானும் ரவுடிதான்' படத்தை 100 முறை பார்த்திருக்கிறேன். அந்த படத்தை பார்த்த பிறகு அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். சார் நான் உங்களுக்கு மிகப்பெரிய ரசிகை. நீங்கள் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றேன். நான் பேசியதை கேட்ட அவர் ஐயோ ஐயோ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் வருத்தப்படுகிறாரா அல்லது வெட்கப்படுகிறாரா என்று எனக்கு புரியவில்லை. விஜய் சேதுபதியின் ரியாக் ஷனை பார்த்து நான் அதிசயித்து விட்டேன்" என்றார்.






