என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த திரைப்படம் ‘கட்ட குஸ்தி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.


    கட்டா குஸ்தி

    இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது, "9 படங்கள் என்னைவிட்டு சென்றன. நம்பிக்கையுடன் இருந்தேன். இன்று என் கையில் 9 படங்கள் இருக்கின்றன. 'எஃப்ஐஆர்' படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்துவிட்டது. ரூ.30 கோடியை 'கட்டா குஸ்தி' திரைப்படம் கடக்கப்போகிறது" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

    • இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.
    • இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


    துணிவு

    இந்நிலையில், 'துணிவு' படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. வைசாக் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    • நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் -2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • மகேஷ் நாராயணன் - கமல்ஹாசன் இணைய இருந்த படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.

    நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் -2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், 'இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    கமல்ஹாசன்

    இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது. இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.


    மகேஷ் நாராயணன்

    சமீபத்தில் மகேஷ் நாராயணன் - கமல்ஹாசன் இணைய இருந்த படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் தொடர்பாக இயக்குனர் மகேஷ் நாராயணன், நானும் கமல் சாரும் இணையும் படம் கைவிடப்படவில்லை என்றும் அவர் தற்போது வேறு படங்களில் பிசியாக உள்ளதால் அப்படங்களை முடித்த பின்னர் தொடங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

    • சமீபத்தில் கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் அக்‌ஷரா சிங் கலந்து கொண்டார்.
    • இவரிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பிரபல போஜ்புரி நடிகை அக்‌ஷரா சிங். சமீபத்தில் கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரைக்குப் பிறகு நடன நிகழ்ச்சிக்காக அவர் அங்கு வந்திருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போஜ்புரி நடிகையிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில்

    கூட்டமாக அவரை திணறடித்தனர். இதனால் அவர் கூட்டத்திற்குள் சிக்கி கொண்டார். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் கோபமடைந்த அக்‌ஷரா சிங் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • நயன்தாரா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’.
    • இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.


    கனெக்ட்

    'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும்.


    கனெக்ட்

    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று (டிசம்பர் 9) நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் அஞ்சலி.
    • அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலி, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது அஞ்சலிக்கு 36 வயது ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சில நடிகர்களுடன் அஞ்சலியை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்து அடங்கியது. நடிகர் ஜெய்யுடன் காதல் மலர்ந்ததாகவும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் பேசினர். இதற்கெல்லாம் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

     

    அஞ்சலி

    அஞ்சலி

    இந்த நிலையில் அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. ஆனாலும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். திருமணம் முடிவானதும் மறைக்காமல் எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன்" என்றார்.

    • விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
    • விடுதலை, ரத்த சாட்சி ஆகிய இரண்டு படங்கள் ஒரே கதை சாயலில் தயாராகி இருப்பதாக வலைத்தளத்தில் சர்ச்சை கிளம்பி உள்ளது.

    விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். ரத்த சாட்சி என்ற படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.

     

    விடுதலை

    விடுதலை

    இப்படத்தின் டிரைலர் வெளியாகி, வெற்றிமாறனின் விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வந்தனர். இரண்டு படங்களுமே நக்சலைட்களுக்கும், போலீசுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை பேசும் படமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

     

    ரத்தசாட்சி

    ரத்தசாட்சி

    இதுகுறித்து இயக்குனர் ரபிக் இஸ்மாயில் கூறும்போது, ''இரண்டு படங்களும் ஒரே விஷயத்தை பேசினாலும் கதைக்களமும், படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களும் வெவ்வேறானவை. ரத்த சாட்சி ஆயுத போராட்டத்தை நியாயப்படுத்தாமல் அமைதியை வலியுறுத்தும் படமாக இருக்கும்" என்றார். 

    • 'பூவெல்லாம் உன் வாசம்', 'அழகி', 'பாபா', 'வேலாயுதம்', 'அழகிய தமிழ் மகன்', 'வேட்டைக்காரன்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே.
    • இவர் மீது இயக்குனர் சச்சின் என்பவர் மும்பை போலீசிலும், மராத்தி திரைப்பட கழகத்திலும் புகார் அளித்துள்ளார்.

    தமிழில் 'பூவெல்லாம் உன் வாசம்', 'அழகி', 'பாபா', 'வேலாயுதம்', 'அழகிய தமிழ் மகன்', 'வேட்டைக்காரன்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள படங்களிலும் வில்லன், நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

     

    சாயாஜி ஷிண்டே

    சாயாஜி ஷிண்டே

    இந்நிலையில் சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் சச்சின் என்பவர் மும்பை போலீசிலும், மராத்தி திரைப்பட கழகத்திலும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''எனது திரைப்படத்தில் நடிக்க சாயாஜி ஷிண்டேவை ஒப்பந்தம் செய்தேன். இதற்காக அவருக்கு சம்பளம் பேசி ரூ.5 லட்சம் கொடுத்தேன். ஆனால் படப்பிடிப்பை தொடங்கிய நேரத்தில் படத்தின் கதையை மாற்றும்படி கூறினார். நான் மறுத்ததும் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறி விட்டார். இதனால் ரூ.17 லட்சம் இழப்பு ஏற்பட்டது. நாங்கள் கொடுத்த ரூ.5 லட்சத்தையும் திருப்பிதரவில்லை. எனவே சாயாஜி ஷிண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    நாய் சேகர் ரிட்டன்ஸ்

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகர் வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் பிரபல ரீல்ஸ் பாடலான 'கச்சா பாதாம்' என்ற பாடலுக்கு தனக்கே உரிய காமெடி பாணியில் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

    நாய் சேகர் ரிட்டன்ஸ்' நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அவதார்: தி வே ஆப் வாட்டர்.
    • இப்படம் டிசம்பர் 16 -ஆம் தேதி 160 மொழிகளில் வெளியாகவுள்ளது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    அவதார்: தி வே ஆப் வாட்டர்

    இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவு சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது. இதையடுத்து வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி தற்போது வரை ரூ.10 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்பதிவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான்.
    • இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


    டி. இமான்

    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் 'வள்ளி மயில்', 'மலை' போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், இசையமைப்பாளர் இமான் புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். ஒரு நிமிடம் உள்ள இந்த பாடலின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.





    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான வெப் தொடர் ‘வதந்தி’.
    • இந்த வெப் தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர்.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.


    வதந்தி

    புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    வதந்தி

    இந்நிலையில், 'வதந்தி' வெப் தொடர் குறித்து 'வெண்ணிலா கபடி குழு' இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எஸ்.ஜே. சூர்யா சார் நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'வதந்தி' வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா மிக சிறப்பான நடிப்பை அளவாக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். லைலா அவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் புஷ்கர் - காயத்ரி மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அறிக்கையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    ×