நடிப்பை அளவாக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.. எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிரபல இயக்குனர் பாராட்டு..

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான வெப் தொடர் ‘வதந்தி’.இந்த வெப் தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர்.
எஸ்.ஜே. சூர்யா
எஸ்.ஜே. சூர்யா
Published on

அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.

வதந்தி

புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வதந்தி

இந்நிலையில், 'வதந்தி' வெப் தொடர் குறித்து 'வெண்ணிலா கபடி குழு' இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எஸ்.ஜே. சூர்யா சார் நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'வதந்தி' வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா மிக சிறப்பான நடிப்பை அளவாக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். லைலா அவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் புஷ்கர் - காயத்ரி மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com