என் மலர்
சினிமா செய்திகள்

டி. இமான்
நடனத்தில் கலக்கும் இசையமைப்பாளர் இமான்.. வைரலாகும் வீடியோ..
- தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான்.
- இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
டி. இமான்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் 'வள்ளி மயில்', 'மலை' போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், இசையமைப்பாளர் இமான் புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். ஒரு நிமிடம் உள்ள இந்த பாடலின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story