என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'.
    • இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

     

    சந்திரமுகி 2

    சந்திரமுகி 2

    தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    கங்கனா ரனாவத்

    கங்கனா ரனாவத்

    இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'சந்திரமுகி 2'-ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லவ் டுடே'.
    • இப்படத்தை தற்போது இந்தி மொழியில் ரீமேக் செய்ய திட்டமிட்ட்டு வருவதாக கூறப்படுகிறது.

    கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக அவரே இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தியேட்டர்கள் மூலம் மட்டுமே ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும் மேலும் ஓ.டி.டி. உரிமை மூலமும் பெரிய தொகை வந்ததாகவும் தகவல் வெளியானது. இப்படத்தை தெலுங்கில் டப் செய்து படக்குழு வெளியிட்டது.

     

    லவ் டுடே

    லவ் டுடே

    இந்நிலையில் 'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவான் பெயர் அடிபடுகிறது. இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே தமிழில் வெற்றி பெற்ற பல படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி உள்ளன. சூர்யா நடித்த சூரரை போற்று படமும் இந்தியில் ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • வீரம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தை பெற்றவர் நடிகர் பாலா
    • இவர் நடித்த 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்று சுமார் ௫௦ படங்களில் நடித்துள்ளார்.

    அனூப் இயக்கத்தில் இவர் நடித்த 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. மம்முட்டி உட்பட பல நடிகர்கள் பாலாவின் நடிப்பைப் பாராட்டி உள்ளனர். இந்தப் படத்தை தயாரித்த நடிகர் உண்ணி முகுந்தன் படம் நல்ல விலைக்கு வியாபாரமாகியும் படத்தில் நடித்த பாலாவுக்கு சம்பளம் எதுவும் தராமல் இழுத்தடித்ததாகத் கூறப்படுகிறது.


    பாலா

    இதனைத் தொடர்ந்து உண்ணி முகுந்தனின் செய்தியாளர் சந்திப்பில் பாலாவின் சம்பளப் பிரச்சினை பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்க, அது பெரும் பிரச்சனையாக மாறியது. இது குறித்து நடிகர் பாலா கூறியதாவது "உண்மை எப்போதும் உறங்காது. தனக்காக குரல் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துக் கொண்டார்.

    விரைவில் நடிகர் பாலா திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று கேரள அரசின் சிறந்த நடிகருக்கான 'கோல்டன் அவார்ட் 'என்கிற விருதைப் பாலா பெற்றுக்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிக்’.
    • இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    கிக்

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    கிக் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிக்' படத்தின் இரண்டாவது பாடலான 'கண்ணம்மா' பாடல் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • இயக்குனர் செல்வராகவன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பகாசூரன்’.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    பகாசூரன் போஸ்டர்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    • பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் ‘இரவின் நிழல்’.
    • இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது.

    இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இரவின் நிழல்

    'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சமீபத்தில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.


    இரவின் நிழல்

    இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை நடிகர் பார்த்திபன் தனது யூ-டியூபில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.
    • இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.


    லத்தி

    'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    லத்தி போஸ்டர்

    அதன்படி, 'லத்தி' திரைப்படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிகைகளை தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    விஜய்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்றுவெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் ஷியாம் தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    வாரிசு

    அதில், "குஷி படப்பிடிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான் என்று சொல்கிறார்கள் என விஜய்யிடம் கேட்டேன். அதற்கு அவர் மேலே கை காட்டி எல்லாம் இறைவன் செயல் என்றார். பிறகு திடீரென்று நான் ஒரு நாள் ஹீரோவாகி விட்டேன். '12பி' படத்தில் நாயகனாக அறிமுகமானது அண்ணனை சந்தித்தேன். அப்போது அவர் என்னடா வரும் போதே சிம்ரன், ஜோதிகானு இரண்டு குதிரையோட வர யாருடா நீ என கேட்டார் " என்று கூறினார்.


    ஷாம்

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி விஜய் கதாநாயகிகளை குதிரையோடு ஒப்பிட்டு பேசுகிறார் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. 

    • இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் மிர்சி சிவா நடிக்கும் திரைப்படம் ‘சலூன்’.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    'சென்னை 28', 'தமிழ் படம்', 'கலகலப்பு' போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் மிர்சி சிவா. இவர் சமீபத்தில் நடித்த 'காசேதான் கடவுளடா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது 'கன்னிராசி', 'தர்மபிரபு' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் 'சலூன் - எல்லா மயிரும் ஒன்னுதான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.


    சலூன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரேதன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அழர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் யோகி பாபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மிர்சி சிவா வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • பேச்சுலர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் திவ்ய பாரதி.
    • உருவக்கேலி குறித்து இவர் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பேச்சிலர்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் திவ்ய பாரதி. இப்படத்தில் இவரின் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இவர் பிக்பாஸில் பிரபலமான முகின் ராவ்வுக்கு ஜோடியாக "மதில் மேல் காதல்" என்கிற படத்தில் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.


    திவ்ய பாரதி

    இந்நிலையில், நடிகை திவ்ய பாரதியை சமூக வலைதளத்தில் பலர் உருவகேலி செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "சமீபகாலமாக நான் உருவக்கேலிகளை எதிர்கொண்டு வருகிறேன். எனது உடல் தோற்றம் போலியானது என்றும், எனது இடுப்பு பகுதியில் பேடுகள் வைத்திருக்கிறேன் என்றும், என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் என்றும் கேலி செய்கிறார்கள்.


    திவ்ய பாரதி

    நான் எலும்பு கூடுபோல் இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். கல்லூரி நாட்களிலும் பலர் என்னை உருவக்கேலி செய்துள்ளனர். இந்த கேலிகள் என்னை மிகவும் பாதித்தது. எனது உடலை வெறுக்கும்படியும் செய்தது. மக்கள் முன்னால் செல்ல பயமாக இருந்தது. மாடலிங்கில் நுழைந்து எனது படங்களை வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்ததும் அதை பார்த்து என் உடல் அமைப்பை பாராட்டினர். இது எனக்கு தைரியத்தை கொடுத்தது. ரசிப்பவர்களும், வெறுப்பவர்களும் எப்போதுமே இருக்கிறார்கள். விமர்சனங்களை பொருட்படுத்தாதவரை நாம் வலிமையாகவும், அன்பாகவும் இருப்போம்" என்றார்.




    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் யோகி பாபு.
    • இவர் தற்போது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


    விஜய் கொடுத்த கிரிக்கெட் பேட்

    இந்நிலையில், யோகி பாபுவுக்கு நடிகர் விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள யோகிபாபு, "இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸாக கொடுத்த விஜய் அண்ணாவிற்கு நன்றி" என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.



    • நடிகை ராஷ்மிகா தற்போது விஜய்யுடன் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிப்பது குறித்து அங்குள்ள தயாரிப்பாளர்கள் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவியது.


    ராஷ்மிகா மந்தனா

    மேலும், ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள 'காந்தாரா' திரைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறியதும் இவர் மீது கன்னட சினிமாவில் வெறுப்புணர்வு உண்டாக காரணமாக அமைந்தது. இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, " காந்தாரா திரைப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளேன். படம் வெளியான சமயத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் பார்க்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.


    ராஷ்மிகா மந்தனா

    மேலும், தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள அவர், "வாய்க்கு வந்தபடி பேசுறவங்க பேசட்டும். ஆனால், உண்மை அவர்களுக்கு தெரியாது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. சினிமாவில் என் நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் அதை திருத்திக் கொள்ள நிச்சயம் உழைப்பேன். சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டு கொள்ள மாட்டேன். இதுவரை எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.

    ×