என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • இந்திய கிரிக்கெட் வீரர் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினிகாந்த்தை காண காத்திருக்கின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

     

    ரஜினி

    ரஜினி

    நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவரகள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

     

    ஹர்பஜன் சிங் - ரஜினி

    ஹர்பஜன் சிங் - ரஜினி

    இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "செப்பு மிங்கிளாகி வரும் தங்கம் அல்ல அவர்.. எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்..!!" சூப்பர் மனிதர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை - நீடூழி வாழ்க தலைவா!" என்று பதிவிட்டு அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    • நடிகர் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    • இவர் நடித்துள்ள தமிழரசன் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

    தமிழரசன் 

    தமிழரசன் 

     

    தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்தை இயக்குனர் பாபு யோகிஸ்வரன் இயக்கி உள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ராமயா நம்பீசன் நடித்துள்ளார்.

     

    தமிழரசன் 

    தமிழரசன் 

    மேலும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகி பாபு, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருடைய ரசிகர்கள் அதிகாலை முதலே ரஜினியின் வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வழக்கம் போல நாடு முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடடி வருகின்றனர். ரஜினி சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார். தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அவரை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும்போல் கூடுவார்கள்.

     

    ரஜினி

    ரஜினி

    காலையில் போயஸ்கார்டன் பகுதியே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காலை 9 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து ரஜினி வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பார். இது வழக்கமான காட்சி என்பதால் இந்த ஆண்டும் ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

     

    ரஜினி

    ரஜினி

    இதனால் ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன்பாக வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்டு, அதிகாலையில் முதலே ரசிகர்கள் ரஜினியின் வருகைக்கு காத்திருந்தனனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, ரஜினி ஊரில் இல்லை அவர் சார்பாக அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று செய்தியாளர்களை சந்தித்து கூறினார். இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் ஆங்காங்கே அமர்ந்து கண்ணீர் மல்க ரஜினியை சந்திக்க நினைத்து ஏமாற்றமடைந்ததை வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா தனது 41-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
    • ஆர்யா பிறந்தநாளை படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

    முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆர்யாவின் 41-வது பிறந்தநாள் நேற்று படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.

     

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படக்குழு

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படக்குழு

    இதனை கேக் வெட்டி படக்குழுவினருடன் இணைந்து ஆர்யா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது படக்குழு சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன், நடிகை சித்தி இத்னானி, இயக்குனர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

    • ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

     

    ரஜினி - முக ஸ்டாலின்

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

    ஜிகர்தண்டா 2

    ஜிகர்தண்டா 2

     

    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு ஜிகர்தண்டா 2-ம் பாகத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

     

    ஜிகர்தண்டா 2

    ஜிகர்தண்டா 2

    இந்நிலையில் அறிவித்தபடி ஜிகர்தண்டா 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படத்தின் டீசர் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.



    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.
    • தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் சமீபத்தில் பூஜை தொடங்கியது.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் அடுத்த வருடம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

     

    தனுஷ்

    தனுஷ்

    இதனிடையே தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பூஜையில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

     

    சஞ்சய் தத்

    சஞ்சய் தத்

    இந்நிலையில் தனுஷ்-சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய் தத்தை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
    • அவதார்-2 படத்திற்கு இந்தியாவில் தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' வரும் 16-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளும், கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

     

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட மொத்தம் 160 மொழிகளில் உலகம் முழுவதும் அவதார்-2 திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு நாடுகளில் அவதார்-2 படத்திற்கான புரோமோஷன் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

     

    இந்நிலையில் இந்தியாவில் அவதார்-2 படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் 10 நொடிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் படத்தின் காட்சிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவதார்-2 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

    • ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி உருவான படம் ‘ரத்தசாட்சி’.
    • இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.

    தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' எனும் சிறுகதையை தழுவி 'ரத்தசாட்சி' திரைப்படம் உருவானது. இப்படத்தை ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்தது. கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் 'ஆஹா தமிழ்' ஓடிடி தளத்தில் கடந்த 9ம் தேதி வெளியானது.

     

    ரத்தசாட்சி

    ரத்தசாட்சி

    இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடித்த கண்ணா ரவி, ஹரிஷ், இளங்கோ, மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.
    • இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

     

    சில்லா சில்லா

    சில்லா சில்லா

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், நேற்று முன்தினம் 'துணிவு' படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    துணிவு - சில்லா சில்லா

    துணிவு - சில்லா சில்லா

     இந்நிலையில் 'சில்லா சில்லா' பாடல் வெளியான 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    • கன்னட படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது.
    • இது குறித்து ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழில் கார்த்தியின் 'சுல்தான்' படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கன்னட படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கன்னட திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. கன்னடத்தில் தயாராகி பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட 'காந்தாரா' படம் வசூலை குவித்து பலரது பராட்டை பெற்ற நிலையில், அந்த படத்தை நான் பார்க்கவில்லை என்று ராஷ்மிகா பேசியது கன்னட ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

     

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகாவை விமர்சித்து வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர். கன்னட படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனால் கோபமான ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''காந்தாரா படத்தை நான் பார்த்து விட்டேன். 'காந்தாரா' படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளேன். 'காந்தாரா' படம் வெளியானபோது நான் படப்பிடிப்பில் இருந்ததால் பார்க்க முடியவில்லை.

     

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

     

    என்னை இழிவுபடுத்தி கேவலமாக பலர் பேசுகிறார்கள். உண்மை அவர்களுக்கு தெரிவது இல்லை. எனது நடிப்பில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் சொந்த வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். இவர்களின் பேச்சுகளை நான் பொருட்படுத்துவது இல்லை" என்று ஆவேசமாக கூறினார்.

    • திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 73-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். வழக்கம் போல நாடு முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.

    திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அவரை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும்போல் கூடுவார்கள். காலையில் போயஸ்கார்டன் பகுதியே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காலை 9 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து ரஜினி வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பார். இது வழக்கமான காட்சி.

    இந்தாண்டு அவரது பிறந்த நாள் ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம் பாபா திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி இருப்பதுதான், ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் பாபா திரைப்படம் மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்து விட்டதாகப் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

    இன்றைய சூழலில் ரசிகர்களிடம் வெளிப்பட்டிருக்கும் ஆன்மீக சிந்தனையால் கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்திருக்கிறது.

    இதற்கு இளம் தலைமுறையினரிடம் எழுந்திருக்கும் ஆன்மீகத் தேடல்தான் காரணம் என்று ரஜினியின் மனதில் தோன்றி இருக்கிறது. இந்த சிந்தனையால் பாபா படத்தை நவீனப்படுத்தி வெளியிட்டால் அது கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று நினைத்தார்.

    அதனால் படத்தை நவீனப்படுத்த சுரேஷ் கிருஷ்ணா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசித்து அதற்கான வேலைகளில் இறங்கி இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பாபா திரைப்படம் வெளியானது. படத்தில் பல காட்சிகள் வெட்டப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டு வெளியாயின.

    ரஜினி நினைத்தது போலவே 1000 திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய வெளியீட்டுக்கு நடப்பது போலவே அதிகாலை 4 மணிக்காட்சிக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

    ரஜினியே எதிர்பார்க்காத வகையில் மறு வெளியீட்டிற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சொந்த படமான பாபா படத்தின் மீது இருந்த தோல்விப்படம் என்ற கறையை நீக்கியதில் தனது ரசிகர்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது என்று நினைக்கும் ரஜினிகாந்த் இந்த ஆண்டு தன்னுடைய 73-வது பிறந்த நாளில் வீட்டில் ரசிகர்களை சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

    இதற்காக போயஸ் தோட்ட வீட்டின் உள்ளேயே சிறிய அளவிலான மேடை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதிகாலையில் வீட்டின் முன்பாக வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட உள்ளன. பாபா வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு ரஜினியை நாளை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள்.

    ×