என் மலர்
நீங்கள் தேடியது "kadharbatsha endra muthuraamalingam"
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா தனது 41-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
- ஆர்யா பிறந்தநாளை படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆர்யாவின் 41-வது பிறந்தநாள் நேற்று படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படக்குழு
இதனை கேக் வெட்டி படக்குழுவினருடன் இணைந்து ஆர்யா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது படக்குழு சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன், நடிகை சித்தி இத்னானி, இயக்குனர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.






