பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் ரத்தசாட்சி திரைப்படம்

ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி உருவான படம் ‘ரத்தசாட்சி’.இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.
ரத்தசாட்சி
ரத்தசாட்சி
Published on

தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' எனும் சிறுகதையை தழுவி 'ரத்தசாட்சி' திரைப்படம் உருவானது. இப்படத்தை ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்தது. கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் 'ஆஹா தமிழ்' ஓடிடி தளத்தில் கடந்த 9ம் தேதி வெளியானது.

ரத்தசாட்சி
ரத்தசாட்சி

ரத்தசாட்சி

இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடித்த கண்ணா ரவி, ஹரிஷ், இளங்கோ, மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com