என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sham"

    • இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.
    • கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.

    தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம்.

    தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, 'வரும் வெற்றி' என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.

    SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.

    அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.

    கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.

    பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளது.  

    • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிகைகளை தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    விஜய்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்றுவெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் ஷியாம் தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    வாரிசு

    அதில், "குஷி படப்பிடிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான் என்று சொல்கிறார்கள் என விஜய்யிடம் கேட்டேன். அதற்கு அவர் மேலே கை காட்டி எல்லாம் இறைவன் செயல் என்றார். பிறகு திடீரென்று நான் ஒரு நாள் ஹீரோவாகி விட்டேன். '12பி' படத்தில் நாயகனாக அறிமுகமானது அண்ணனை சந்தித்தேன். அப்போது அவர் என்னடா வரும் போதே சிம்ரன், ஜோதிகானு இரண்டு குதிரையோட வர யாருடா நீ என கேட்டார் " என்று கூறினார்.


    ஷாம்

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி விஜய் கதாநாயகிகளை குதிரையோடு ஒப்பிட்டு பேசுகிறார் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. 

    • வம்சி இயக்கத்தில் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், நடிகர் ஷாம், விஜய்யின் நட்பு பற்றி கூறியதாவது, "குஷி படத்தில் நடித்த பிறகு இப்போதுதான் அவருடன் இணைந்து நடிக்கிறேன். நான் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இன்று அவர்கள் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார்கள். ஆனால் விஜய் அண்ணாவிடம் இருக்கும் அந்தப் பணிவும் அன்பும் யாரிடமும் இல்லை.


    விஜய் - ஷாம்

    நிறைய சொல்லிக்கொடுப்பார். நான் தில்லாலங்கடி படத்தில் நடித்தது பற்றி பாராட்டி பேசினார். அவர் வீட்டில் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். 'வாரிசு' படத்தில் நடித்தது ஒரு குடும்பத்தில் வாழ்ந்தது போல் இருந்தது. 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்" என்று கூறினார்.

    'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

    ஷாம், ஆத்மியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காவியன்’ படத்துடன் கனெக்‌ஷன் ஏற்படுத்தி இருக்கிறார் நடிகர் விஜய். #Kaviyan #Sarkar
    2 எம் சினிமாஸ் கே.வி.சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காவியன்’.

    இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் ஒரு நரகமாகும்.

    இரவு நேரங்கள் கூட பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி ‘காவியன்’ படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். 

    அதனாலேயே ‘காவியன்’ படத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படும் என்கிறார்கள். படத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



    ‘காவியன்’ படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×