'சந்திரமுகி 2' படத்தில் இணைந்த கங்கனா ரனாவத்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'.இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

சந்திரமுகி 2
சந்திரமுகி 2

சந்திரமுகி 2

தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'சந்திரமுகி 2'-ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com