வெற்றிமாறனின் 'விடுதலை' கதை போன்று என் படமா? விளக்கம் அளித்த இயக்குனர்

விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.விடுதலை, ரத்த சாட்சி ஆகிய இரண்டு படங்கள் ஒரே கதை சாயலில் தயாராகி இருப்பதாக வலைத்தளத்தில் சர்ச்சை கிளம்பி உள்ளது.
வெற்றிமாறனின் 'விடுதலை' கதை போன்று என் படமா? விளக்கம் அளித்த இயக்குனர்
Published on

விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். ரத்த சாட்சி என்ற படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.

விடுதலை
விடுதலை

விடுதலை

இப்படத்தின் டிரைலர் வெளியாகி, வெற்றிமாறனின் விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வந்தனர். இரண்டு படங்களுமே நக்சலைட்களுக்கும், போலீசுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை பேசும் படமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ரத்தசாட்சி
ரத்தசாட்சி

ரத்தசாட்சி

இதுகுறித்து இயக்குனர் ரபிக் இஸ்மாயில் கூறும்போது, ''இரண்டு படங்களும் ஒரே விஷயத்தை பேசினாலும் கதைக்களமும், படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களும் வெவ்வேறானவை. ரத்த சாட்சி ஆயுத போராட்டத்தை நியாயப்படுத்தாமல் அமைதியை வலியுறுத்தும் படமாக இருக்கும்" என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com