சிரஞ்சீவி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'.இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
வால்டேர் வீரய்யா
வால்டேர் வீரய்யா
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டேர் வீரய்யா
வால்டேர் வீரய்யா

வால்டேர் வீரய்யா

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

வால்டேர் வீரய்யா
வால்டேர் வீரய்யா

வால்டேர் வீரய்யா

இந்நிலையில் 'வால்டேர் வீரய்யா' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com