என் மலர்
நீங்கள் தேடியது "பார்வதி நாயர்"
- என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
- அண்மையில் இவர் வீட்டில் கொள்ளை நடைபெற்றது.
என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். அண்மையில் இவரின் வீட்டில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பார்வதி நாயர்
ரூ.5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் ஒன்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான இன்னொரு கைகடிகாரமும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.

பார்வதி நாயர்
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சில ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நடிகை பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சமீபத்தில் நடிகை பார்வதி நாயர், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார்.
- இந்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பார்வதி நாயர்
கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி சுபாஷ் சந்திர போஸ் ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடி காரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ.2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பார்வதி நாயர்
இந்த நிலையில் தான் பார்வதி நாயர் தனது புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் தருவதாகவும் கொடுத்த புகாரின் பேரில் தற்போது நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுபாஷ் சந்திர போஸ், நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நடிகை பார்வதி நாயர், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார்.
- இவரின் புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர்.
நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

பார்வதி நாயர்
இந்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பார்வதி நாயர்
கடந்த அக்டோபர் 20-ம் தேதி தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.

பார்வதி நாயர்
இந்த புகார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது தனது புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வேலைக்கார வாலிபர் சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர்.
- சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்திலும் நடித்திருந்தார்.
- ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.
என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பார்வதி நாயர். இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் என்பவரை பார்வதி நாயர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

"என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நான் ஆவலுடன் இருக்கிறேன். ஆஷ்ரித்தை ஒரு விருந்தில் தற்செயலாக சந்தித்தேன். நாங்கள் அன்று பேச ஆரம்பித்தோம். ஆனால் உண்மையாக நெருங்கி வர சில மாதங்கள் ஆனது. தற்போது இருவரும் காதலித்து வருகிறோம்.
பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் மலையாள மற்றும் தெலுங்கு பாரம்பரியம் இரண்டையும் கலந்து நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி தொடங்கும் ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய அனைத்து விழாக்களும் சென்னையில் நடைபெறும். திருமணத்திற்குப் பிந்தைய வரவேற்பு கேரளாவில் நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சில தினங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்தது.
- திருமணத்தில் உறவினர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார்.
நடிகை பார்வதி நாயருக்கும், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் காதல் மலர்ந்தது சில தினங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்தது.
பார்வதி நாயர், ஆஷ்ரித் அசோக் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் உறவினர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
- நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த இவரின் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்வதி நாயரின் வீட்டில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் ஒன்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான இன்னொரு கைகடிகாரமும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

பார்வதி நாயர்
கடந்த 2 ஆண்டுகளாக பார்வதி நாயரின் வீட்டில் வேலை செய்து வந்த நபரே இந்த பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசில் பார்வதி நாயர் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய வேலைக்கார வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.






