என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நீண்ட நாள் காதலனை மணக்கிறார் நடிகை பார்வதி நாயர்
    X

    நீண்ட நாள் காதலனை மணக்கிறார் நடிகை பார்வதி நாயர்

    • சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்திலும் நடித்திருந்தார்.
    • ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.

    என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பார்வதி நாயர். இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்திலும் நடித்திருந்தார்.

    இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் என்பவரை பார்வதி நாயர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


    "என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நான் ஆவலுடன் இருக்கிறேன். ஆஷ்ரித்தை ஒரு விருந்தில் தற்செயலாக சந்தித்தேன். நாங்கள் அன்று பேச ஆரம்பித்தோம். ஆனால் உண்மையாக நெருங்கி வர சில மாதங்கள் ஆனது. தற்போது இருவரும் காதலித்து வருகிறோம்.

    பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் மலையாள மற்றும் தெலுங்கு பாரம்பரியம் இரண்டையும் கலந்து நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி தொடங்கும் ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய அனைத்து விழாக்களும் சென்னையில் நடைபெறும். திருமணத்திற்குப் பிந்தைய வரவேற்பு கேரளாவில் நடத்த முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×