என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.. தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் செய்த செயல்..
    X

    விக்ரம்

    கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.. தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் செய்த செயல்..

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    தங்கலான்

    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒகேனக்கலில் நடைபெற்றுள்ளது.


    தங்கலான்

    இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து "இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு. கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.'பேக் அப்' என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன? அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்ததுதான் மிச்சம்" என்று பதிவிட்டுள்ளார்.



    Next Story
    ×