என் மலர்

  சினிமா செய்திகள்

  விறுவிறுப்பாக நடந்த மாமன்னன் படப்பிடிப்பு
  X

  மாமன்னன்

  விறுவிறுப்பாக நடந்த மாமன்னன் படப்பிடிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் மாரி செல்வராஜ்.
  • இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்.

  பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது.

  மாமன்னன்

  இதனை தொடர்ந்து நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை மாரி செல்வராஜ் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் நடத்தினார். கடந்த 4 நாட்களாக ஒரு சண்டைக்காட்சி உள்பட பல காட்சிகள் அந்த பகுதியில் படமாக்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் சண்டையிடும் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பை ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர்.

  மாரி செல்வராஜின் 4-வது படமான வாழை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×