

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், 'ரஞ்சிதமே' மற்றும் சிம்பு பாடியுள்ள 'தீ தளபதி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
விஜய் - லோகேஷ் கனகராஜ்
இப்படத்தைத் தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர், விகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 67' நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகவும், சஞ்சய் தத், பிரித்விராஜ் உள்ளிட்ட பல மொழி நடிகர்கள் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
விஜய் - லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில் 'தளபதி 67' படத்தின் பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளதாகவும் இந்தப் பூஜையில் விஜய், லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.