மன்னிக்கணும்! நான் உங்க ஆளு இல்ல - பாபா பட டிரைலர் வைரல்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாபா'.இப்படம் தற்போது புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
பாபா
பாபா
Published on

கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

பாபா
பாபா

பாபா

மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பாபா படத்திற்காக டப்பிங் பணியில் ஈடுபட்ட ரஜினி
பாபா படத்திற்காக டப்பிங் பணியில் ஈடுபட்ட ரஜினி

பாபா படத்திற்காக டப்பிங் பணியில் ஈடுபட்ட ரஜினி

இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த புதிய டிரைலரை ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஒரு படம். பாபா ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பு விரைவில் வெளியாகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com