என் திமிரான தமிழச்சி.. காதலில் விழுந்த தெருக்குரல் அறிவு..

தெருக்குரல் அறிவின் 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக இருந்தது.இவர் வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.
என் திமிரான தமிழச்சி.. காதலில் விழுந்த தெருக்குரல் அறிவு..
Published on

2018-ஆம் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாடகராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. தொடர்ந்து வட சென்னை, நட்பே துணை, ஜிப்சி போன்ற பல படங்களில் பாடல்கள் எழுதி பாடியும் உள்ளார்.

தெருக்குரல் அறிவு

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் இவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக இருந்து. இந்த பாடல் மூலம் இவர் பலரது கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.

தெருக்குரல் அறிவு பதிவு

இந்நிலையில், தெருக்குரல் அறிவு, தற்போது தான் காதலித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என் திமிரான தமிழச்சி" எனக் குறிப்பிட்டு கல்பனா அம்பேத்கர் என்பவரை காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கல்பனா அம்பேத்கர்

பா. இரஞ்சித் தயாரிப்பில் வெளியான மக்கள் இசை நிகழ்ச்சியில் கல்பனா அம்பேத்கர் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com