என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
    • இப்படம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா நேற்று விசாரணைக்கு ஆஜாரானார்.

    தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். அவர் தெலுங்கில் நடித்த படங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர். தமிழில் நோட்டா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது லைகர் திரைப்படம் தோல்வி அடைந்தது.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசானது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி தயாரித்திருந்தார். லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார்.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    விசாரணைக்குப் பின் வெளியே வந்த விஜய் தேவரகொண்டா கூறியதாவது, "பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தற்போது 'லி மஸ்க்' என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ளார்.
    • விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார்.

    இந்திய திரையரங்குகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார். முன்னதாக '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார். அதே போல் 'லி மஸ்க்' என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

     

    ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினி

    ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினி

    இந்த படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 'விர்ச்சுவல் ரியாலிட்டி' மூலம் திரைப்படங்களை காண்பதற்கு பிரத்யேக கண்ணாடி போன்ற கருவி கொடுக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர் அமரும் நாற்காலியானது, திரைப்படத்தில் வரும் காட்சிக்கு ஏற்ப அசைவுகளை கொடுக்கிறது. இதனால் பார்வையாளர்கள் காட்சிக்குள் சென்றது போன்ற தத்ரூபமான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

     

    லி மஸ்க் படத்தை கண்டு ரசித்த ரஜினி

    'லி மஸ்க்' படத்தை கண்டு ரசித்த ரஜினி

    இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்து கொண்டு ரஜினிகாந்த் படம் பார்க்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டி.எஸ்.பி' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படம் ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மேயாத மான், பெண்குயின், பபூன், 777 சார்லி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஸ்டோன் பென்ச் நிறுவனம் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் 'டி.எஸ்.பி' என்ற படத்தை தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார்.

    டி.எஸ்.பி

    டி.எஸ்.பி

     

    இப்படத்தில் அனு கீர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

    நாளை (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் டி.எஸ்.பி திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். மேலும் திரையரங்குகளில் விழாகோலம் போல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

    • இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் 'கனெக்ட்'.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.


    கனெக்ட்

    'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கனெக்ட்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    கனெக்ட் போஸ்டர்

    மேலும், 'கனெக்ட்' திரைப்படம் தமிழில் முதல்முறையாக இடைவேளையில்லாமல் உருவான திரைப்படம் என்றும் இதன் ரன்னிங் டைம் 99 நிமிடம் என்றும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் திரைப்படம் ‘நந்தன்’.
    • இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியிருக்கும் காரி படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    நந்தன் போஸ்டர்

    இதைத்தொடர்ந்து நடிகர் சசிகுமார் தற்போது 'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு 'நந்தன்' என தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.



    • இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’.
    • இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    அவதார்: தி வே ஆப் வாட்டர்

    சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் 3 வார வாசூலில் இருந்து ஒவ்வொரு வாரமும் 60 சதவீதத்தை வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.


    அவதார்: தி வே ஆப் வாட்டர்

    ஆனால் கேரளாவில் வேற்று மொழி படங்களின் வசூலில் 50 முதல் 55 சதவீதம் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கு மேல் வழங்கினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறியுள்ளது. இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இப்படம் கேரளாவில் வெளியாகுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    • இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.


    டிமான்ட்டி காலனி

    அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து 'டிமான்ட்டி காலனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டார்.


    டிமான்ட்டி காலனி

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    டிமான்ட்டி காலனி 2 போஸ்டர்

    அதன்படி, 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த போஸ்டரில் அஜய் ஞானமுத்து இயக்குவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.



    • இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லவ் டுடே’.
    • இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுது. மேலும், இப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.


    லவ் டுடே

    இப்படத்தின் டைட்டில் 1997-ஆம் ஆண்டு இயக்குனர் பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'லவ் டுடே' படத்தின் டைட்டில் ஆகும். இந்நிலையில், 'லவ் டுடே' படத்தின் இயக்குனர் பாலசேகரனுக்கு நன்றி தெரிவிக்க மறந்து விட்டதாக பிரதீப் ரங்கநாதன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    லவ் டுடே

    அந்த பதிவில், "லவ் டுடே என்ற தலைப்பை பயன்படுத்தும் போது அதை முதலில் உருவாக்கியவருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன். அது லவ் டுடே பட இயக்குனர் பாலசேகரன், காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளீர்கள் . தலைப்பிற்கு நன்றி சார் மற்றும் தாராளமாக இருந்ததற்கும்" என்று பதிவிட்டுள்ளார்.


    லவ் டுடே

    இந்த பதிவிற்கு ரசிகர்கள் தயவு செய்து டைட்டிலில் இயக்குனருக்கு நன்றி தெரிவித்து விடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.



    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நீர்ப்பறவை’.
    • இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நீர்ப்பறவை'. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். மேலும், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


    நீர்ப்பறவை

    இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும், நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


    நீர்ப்பறவை

    சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • விஷ்ணு விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
    • இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.

     

    கட்டா குஸ்தி

    கட்டா குஸ்தி

     'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வைரலானது.

    கட்டா குஸ்தி

    கட்டா குஸ்தி

    இந்நிலையில் இப்படத்தின் முதல் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நிபந்தனைகளா? எதிர்பார்ப்புகளா? என்று குறிப்பிட்டுள்ளது. இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    • இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது என்சி22 படத்தை இயக்கி வருகிறார்.
    • இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    என்சி22

    இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பிரேம்ஜி - யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு

    இந்நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய மொபைல் போனை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ள பிரேம்ஜி, " எனக்கு பரிசளித்ததற்கு நன்றி என் இசைக்குரு யுவன் ஷங்கர் ராஜா.. லவ் யூ.." என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, 'அப்போ எனக்கு பரிசு இல்லை' என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா 'உங்களுக்காக சில இசைகளை குக் செய்து வருகிறேன்' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.சி.15.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஆர்.சி.15

    இதைத்தொடர்ந்து, இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிற்காக படக்குழு நியூசிலாந்து சென்றிருந்தது. இந்நிலையில், இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    ×