'டிமான்ட்டி காலனி -2' புதிய அப்டேட்.. குழப்பத்தில் ரசிகர்கள்..

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'.இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
'டிமான்ட்டி காலனி -2' புதிய அப்டேட்.. குழப்பத்தில் ரசிகர்கள்..
Published on

2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

டிமான்ட்டி காலனி

அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து 'டிமான்ட்டி காலனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டார்.

டிமான்ட்டி காலனி

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

டிமான்ட்டி காலனி 2 போஸ்டர்

அதன்படி, 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த போஸ்டரில் அஜய் ஞானமுத்து இயக்குவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com