என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது என்சி22 படத்தை இயக்கி வருகிறார்.
- இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

என்சி22
இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரேம்ஜி - யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய மொபைல் போனை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ள பிரேம்ஜி, " எனக்கு பரிசளித்ததற்கு நன்றி என் இசைக்குரு யுவன் ஷங்கர் ராஜா.. லவ் யூ.." என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, 'அப்போ எனக்கு பரிசு இல்லை' என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா 'உங்களுக்காக சில இசைகளை குக் செய்து வருகிறேன்' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
So no gift for me @thisisysr https://t.co/OJyxMLSC5b
— venkat prabhu (@vp_offl) November 29, 2022
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.சி.15.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.சி.15
இதைத்தொடர்ந்து, இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிற்காக படக்குழு நியூசிலாந்து சென்றிருந்தது. இந்நிலையில், இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
And it's a wrap in New Zealand 🇳🇿
— Ram Charan (@AlwaysRamCharan) November 30, 2022
song & it's visuals are fabulous 🎶 @shankarshanmugh garu,@BoscoMartis & @DOP_Tirru made it even more special.@advani_kiara stunning as always👌@MusicThaman u nailed it again👍 @ManishMalhotra @AalimHakim thank you fr amazing looks. @SVC_official pic.twitter.com/1VJ9icH7VK
- பிக்பாஸ் நிகழ்ச்சி 52-வது நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான புரோமோவில் அசீம் மற்றும் அமுதவாணன் சண்டையிடுகின்றனர்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 52-வது நாட்களை நெருங்கியுள்ளது.

இதில், இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் பழங்குடியினரான அசீம், ஏலியன் அணியில் உள்ள அமுதவாணனிடம் சண்டை போடுகிறார். அதில், ஏன் நீங்க இவ்ளோ அசிங்கமா சீப்பா கேம் விளையாடுறீங்க. அவங்க கேவலமானவங்க நம்ம அப்படி இல்ல என்று அசீம் சொல்ல, நீங்க ரவுடிதனம் பண்றீங்க என்று அமுதவாணனும் விக்ரமனும் கோபமாக வாதிடுகின்றனர். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது.
- பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ்.
- இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது.
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவரது படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கிறார்கள். இதனால் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி விட்டார். பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. ஆனால் காதலிப்பதை இருவருமே உறுதிப்படுத்தவில்லை.

தற்போது இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது. பிரபாஸ் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கிறார். இதில் சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கிருத்தி சனோன் அளித்த பேட்டியில், ''பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார். கிருத்தி சனோன் வேறு ஒருவர் இதயத்தில் இருக்கிறார். அந்த மனிதர் தற்போது தீபிகாவுடன் படப்பிடிப்பில் இருக்கிறார்," என இருவரும் காதலிப்பதை இந்தி நடிகர் வருண் தவானும் மறைமுகமாக உறுதிப்படுத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து இருவரது காதலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவற்றை "பொய்யான செய்தி" என்று கிருத்தி சனோன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். கிருத்தி சனோன் அது காதலும் இல்லை, பப்ளிசிட்டியும் இல்லை. அந்த ரியாலிட்டி ஷோவில் எங்களது (ஓநாய்) கொஞ்சம் காட்டுத்தனமாக நடந்து கொண்டார். ஒரு வேடிக்கையான கேலிப் பேச்சு இப்படி வதந்தி வரக் காரணமாகிவிட்டது. ஏதாவது ஒரு இணையதளம் எனது திருமணத் தேதியை அறிவிப்பதற்கு முன்பு உங்களது கற்பனையை உடைத்து விடுங்கள். வதந்திகள் அனைத்து நிச்சயம் ஆதாரம் இல்லாதவை," என குறிப்பிட்டுள்ளார். இதனால் பிரபாஸ் - கிருத்தி சனோன் காதல் பற்றிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
- மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று வழக்கு தொடர்ந்தனர்.
- இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

தனுஷ்
கதிரேசன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த குற்றவியல் சீராய்வு மனுவில், " நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரி தொடர்ந்த வழக்கில் தனுஷ் தரப்பிலிருந்து போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார்.

தனுஷ்
நடிகர் தனுஷ், இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் என்ற முடிவுக்கு உயர் நீதிமன்றம் வரவில்லை. தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷின் பிறப்புச் சான்றிதழின் உண்மை தன்மையை அறிய சான்றிதழை மதுரை மாநகராட்சிக்கு கீழ் நீதிமன்றம் அனுப்பியது. அதன் முடிவு வருவதற்குள் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தனுஷ்
எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து என் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றம் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் மாஸான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டரில் 'வாரிசு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு உலக அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு போஸ்டர்
இதன் மூலம் 'வாரிசு' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்வுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Gear up for #VarisuPongal 🔥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman
— Sri Venkateswara Creations (@SVC_official) November 29, 2022
#Varisu #VarisuHoardings pic.twitter.com/OP66AjlKYQ
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'.
- இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

போனி கபூர் - அஜித்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

அஜித்தின் புதிய கெட்டப்
இந்நிலையில் அஜித்தின் தற்போதைய புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் படப்பிடிப்புக்கு முந்தைய புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
- சமந்தா, மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
- உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நடித்துள்ள யசோதா படத்துக்கு சமீபத்தில் டப்பிங் பேசிய போதும் குளுக்கோஸ் ஏற்றிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமந்தா
தற்போது சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டிலேயே இந்த சிகிச்சையை பெற்று வருகிறார். ஆனாலும் உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமந்தா
ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் குஷி உள்பட சில படங்களில் நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிகிச்சை முடிந்த பின் இந்த படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் படம் 'விஜயானந்த்'.
- சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தற்போது தயாராகி இருக்கும் படம் 'விஜயானந்த்'. கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி.ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி.ஆர்.எல்.பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வருகிற டிசம்பர் 09ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பட வெளியீட்டுக்கு முன் படக்குழுவினர், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதில் படத்தின் கதாநாயகன் நிஹால் பேசுகையில், ''இந்த விஜயானந்த் திரைப்படம் நான் கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படம். நான் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கினேன். நான் ஒரு மேடை நாடக நடிகரும் கூட. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி தொடரிலும், சில திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கிய 'ட்ரங்க்' படத்தில் நான் நாயகனாக அறிமுகமானேன். இருவரும் 2019 ஆம் ஆண்டில் அடுத்த படமாக வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம்.
சுயசரிதை திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்றால், அதற்கு மூல காரணம் என்னுடைய குருவாக நினைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மணிரத்னம் தான். அவர் இயக்கத்தில் வெளியான குரு திரைப்படத்தை பார்த்த பிறகு தான் எங்களுக்கும் இது போன்றதொரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பார்த்த முதல் சினிமா குரு. அது என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் டாக்டர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

விஜய் சங்கேஸ்வர் சாதித்த சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள் அனைத்தும் எனக்கு வியப்பை அளித்தது. இதற்காக ஆறு மாதங்கள் ஆய்வு செய்து திரைக்கதை உருவாக்கினோம். அப்போது எங்களிடத்தில் தயாரிப்பாளர்கள் இல்லை. அதன் பிறகு விஜய் சங்கேஸ்வரை சந்தித்தோம். அவரை சந்தித்தவுடன், 'உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறோம்' என சொன்னோம். ஒரு நிமிடம் அமைதி காத்தார். 'நான் ஒரு பிரபலமான விளையாட்டு வீரனும் அல்ல. பிரபலமான திரைப்பட நடிகரும் அல்ல. பிறகு ஏன் என்னுடைய சுயசரிதையை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறீர்கள்?' எனக் கேட்டார். அப்போது நாங்கள், 'எங்களைப் போன்ற திரைப்பட நடிகர்கள் எல்லாம் திரையில் தான் நாயகர்கள். ஆனால் உங்களைப் போன்றவர்கள் தான் நிஜ கதாநாயகர்கள். உங்களின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் முன்னுதாரணம் நட்சத்திரமாக இருக்கிறீர்கள்.' என பதிலளித்தோம். அதன் பிறகு தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நீண்டது. அதன் பிறகே அவர் சம்மதித்தார்.. படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார்.
நான் ஒரு நட்சத்திர நடிகரல்ல என்றாலும், கதை மீதான நம்பிக்கையின் காரணமாக.. என்னை கதையின் நாயகனாக தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் ஏற்றுக்கொண்டார். எங்கள் படக்குழு வளர்ந்து வரும் நட்சத்திரங்களையும், தொழில் நுட்ப கலைஞர்களையும் உள்ளடக்கியது. எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து படத்தை உருவாக்கவும் வாய்ப்பளித்தார். ஏனெனில் சினிமா என்பது ஒரு கலை. வியாபாரம் அல்ல. இதனை உணர்ந்து கலை வடிவத்திற்குரிய மரியாதையும் அவர் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
- மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து.
- இது குறித்து அவமானம் இப்போ அதிகாரப்பூர்வமானது என்று பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

நாடவ் லேபிட்
அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார். அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளும் ஆதரவும் தெரிவித்தனர்.

அனுபம் கேர்
நாடவ் லேபிட் தெரிவித்த கருத்து குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், அவமானம் இப்போ அதிகாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் அனுபம் கேர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பொய் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் அது வீழ்ந்துவிடும். உண்மையின் முன்னால் அது தாக்குப் பிடிக்காது என்றார்.
தேர்வுக்குழு தலைவரின் கருத்துக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் அக்னிஹோத்ரி, ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என அவர் காட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.
- விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' தமிழ் பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

வாரிசு
தெலுங்கில் உருவாகியுள்ள 'ரஞ்சிதமே' பாடல் இன்று (30.11.2022) காலை 9.09 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், சரியாக வெளியிடப்பட்டது. இந்த பாடலை அனுராக் குல்கரனி மற்றும் எம்.எம்.மானசி இணைந்து பாடியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- பிரபல நடிகை ராஷ்மிகா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
- ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது.
தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிப்பது குறித்து அங்குள்ள தயாரிப்பாளர்கள் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவியது.

ராஷ்மிகா
இந்நிலையில் ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு சில விஷயங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தாங்க முடியாத வேதனையை தருகிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் வந்திருக்கிறது. நான் பேசாத விஷயங்களைப் பற்றி என் மீது விமர்சனங்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. நான் பேசாத விஷயங்கள் தவறாக சென்று எனக்கு எதிராக மாறுவதை பார்க்கிறேன்.

ராஷ்மிகா
இப்படி வரும் தவறான செய்திகள் ஒருபுறம் சினிமா துறையிலும், இன்னொருபுறம் எனக்கு இருக்கும் நல்ல தொடர்புகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. என்னோடு எனது உறவினர்கள், நண்பர்களும் இதனால் கவலைப்படுகிறார்கள். என்னை நான் மெருகேற்றிக் கொள்ள என்னை பற்றி வரும் நல்ல விமர்சனங்களை எப்பொழுதும் வரவேற்கிறேன். ஆனால் தேவையில்லாத விமர்சனங்களை நான் எதிர்கொள்ளும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்றார்.






