என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வாரிசு

    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' தமிழ் பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

     

    வாரிசு

    வாரிசு

    தெலுங்கில் உருவாகியுள்ள 'ரஞ்சிதமே' பாடல் இன்று (30.11.2022) காலை 9.09 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், சரியாக வெளியிடப்பட்டது. இந்த பாடலை அனுராக் குல்கரனி மற்றும் எம்.எம்.மானசி இணைந்து பாடியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    • பிரபல நடிகை ராஷ்மிகா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது.

    தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிப்பது குறித்து அங்குள்ள தயாரிப்பாளர்கள் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவியது.

    ராஷ்மிகா

    ராஷ்மிகா

     

    இந்நிலையில் ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு சில விஷயங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தாங்க முடியாத வேதனையை தருகிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் வந்திருக்கிறது. நான் பேசாத விஷயங்களைப் பற்றி என் மீது விமர்சனங்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. நான் பேசாத விஷயங்கள் தவறாக சென்று எனக்கு எதிராக மாறுவதை பார்க்கிறேன்.

    ராஷ்மிகா

    ராஷ்மிகா

     

    இப்படி வரும் தவறான செய்திகள் ஒருபுறம் சினிமா துறையிலும், இன்னொருபுறம் எனக்கு இருக்கும் நல்ல தொடர்புகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. என்னோடு எனது உறவினர்கள், நண்பர்களும் இதனால் கவலைப்படுகிறார்கள். என்னை நான் மெருகேற்றிக் கொள்ள என்னை பற்றி வரும் நல்ல விமர்சனங்களை எப்பொழுதும் வரவேற்கிறேன். ஆனால் தேவையில்லாத விமர்சனங்களை நான் எதிர்கொள்ளும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்றார்.

    • நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் '18 பேஜஸ்'.
    • இப்படத்தை இயக்குனர் பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '18 பேஜஸ்'. இந்த படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.


    18 பேஜஸ்

    இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சிம்பு 'டைம் இவ்வா பிள்ளா' என்ற பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான முன்னோட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இதன் முழுமையான பாடல் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    சமீபத்தில் 'தி வாரியர்' திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய 'புல்லட்' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.


    சந்திரமுகி 2

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'சந்திரமுகி 2'-ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துவந்ததையடுத்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி 50-வது நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 51-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில், இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் பழங்குடியினரான அசீம் நான் வீட்டின் உள்ளே செல்கிறேன் என்று கூறுகிறார். இதற்கு சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், அசீம் நான் நீங்க இல்ல இங்க யார் சொல்றதையும் கேட்கமாட்டேன் என்று வீதிகளை மீறி பேசுகிறார். இதனால் கடுப்பான விக்ரமன் தனிப்பட்ட நபருக்காக விளையாட்டு இல்லை அசீம் வெற்றி பெற்றால் அது செல்லாது என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • விஷ்ணு விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
    • இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.


    கட்டா குஸ்தி

    'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    கட்டா குஸ்தி போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் மூன்றாவது பாடலான 'சண்ட வீரச்சி' பாடல் வெளியாகியுள்ளது. விவேக் வரிகளில் கிடாக்குழி மாரியம்மாள் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.




    • நடிகர் விஜய் சேதுபதி 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விஜய்சேதுபதி நடிப்பில் விக்ரம், மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 3 இந்தி படங்கள், ஒரு தெலுங்கு படம் கைவசம் உள்ளன. தற்போது தமிழில் பொன்ராம் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    டி.எஸ்.பி

    இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.


    டி.எஸ்.பி போஸ்டர்

    அதன்படி, உப்புளியப்பன் என்ற கதாபாத்திரத்தில் சிங்கம்புலியும் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் தீபாவும் முருக பாண்டி கதாபாத்திரத்தில் இளவரசும் நடித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி  தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.



    • சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா.
    • இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார்.

    சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய மெகாத்தொடர் இனியா. சன் டிவியில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.


    இனியா

    இந்த தொடரில் கதையின் நாயகியான இனியா சுட்டிப் பெண். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர். அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே இலக்கு. அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள். ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய் தப்பெல்லாம் கூட பண்ணலாம் அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா.

    ஆனால், கதையின் நாயகன் விக்ரம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தவறையெல்லாம் கூட பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பவன். தப்பை சகித்துக் கொள்ள முடியாதவன். எதிரும் புதிருமாய் உள்ள நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும், யார் யாரை வெல்லப் போகிறார்கள், என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள மெகாத்தொடர் இனியா.


    இனியா

    இந்த தொடரில் இனியாவாக ஆலியா மானசா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ளார். சன் டிவியில் தொகுப்பாளராய் பணிபுரிந்த ரிஷி, விக்ரமாக நடிக்கிறார். மேலும், சந்தான பாரதி, பிரவினா, எல்.ராஜா, மான்ஸி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இனியா தொடரில் சரிகம நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளராக இருக்கும் பி.ஆர். விஜயலட்சுமி, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தான பாரதி, சங்கர் குரு பட இயக்குனர் எல். ராஜா, தொரட்டி பட இயக்குனர் மாரிமுத்து, இந்தத் தொடரை இயக்கும் நாராயணமூர்த்திய ஆகிய ஐந்து இயக்குனர்கள் இணைந்து பணியாற்றிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 'மோனிஷா என் மோனலிசா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ்.
    • இவர் 23 வருடங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது கஷ்டத்திற்காக கொடுத்த கடனை திருப்பி கொடுத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'மோனிஷா என் மோனலிசா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். தொடர்ந்து, மலபார் போலீஸ், குஷி, சாக்லேட் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.

    ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி இருந்த மும்தாஜ், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு குறைவான வாக்குகளுடன் வெளியேறினார். இந்நிலையில், நடிகை மும்தாஜ் 23 வருடங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது கஷ்டத்திற்காக கொடுத்த கடனை திருப்பி கொடுத்துள்ளார்.


    மும்தாஜ்

    மேலும், "நான் பிரபலமாக இல்லாத போது சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி. பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவோ நல்லதாக இருந்தாலும், அதை செய்வதில் தவறிழைத்து, காலப்போக்கில் மறந்துவிட்டேன். பார்த்திபன் சார், இந்த சினிமாத் துறையில் நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தந்தருள்வானாக" என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது இணையப் பக்கத்தில், "கற்றது:பிரதிபலன் நோக்காமல் இயன்றதை செய்தல் மற்றது:செய்த உதவியை நோகாமல் மறந்துவிடல். திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் 'நாளை'என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார்.தொடர்ந்தால் யாவும் ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார்.


    பார்த்திபன்

    மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை, தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்! தினமும் ஒரு நல்லது செய்ய முயற்சிக்கிறேன். இன்றும் செய்தேன். அதையெல்லாம் நான் சொல்வதில்லை. அவையாவும் அகத்தின் வாக்கம் கிளீனர். பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல அப்படியிருக்க இதில்… நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.



    • விஷ்ணு விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.
    • இந்த படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.


    கட்டா குஸ்தி

    'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    கட்டா குஸ்தி

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் மூன்றாவது பாடலான 'சண்ட வீராச்சி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ரஞ்சிதமே

    ரஞ்சிதமே

     

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

     

     

    ரஞ்சிதமே

    ரஞ்சிதமே

    இந்நிலையில் தெலுங்கில் உருவாகியுள்ள 'ரஞ்சிதமே' பாடலை நாளை (30.11.2022) காலை 9.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை அனுராக் குல்கரனி மற்றும் எம்.எம்.மானசி இணைந்து பாடியுள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

     

    • தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட்டை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் கண்டித்துள்ளார்.
    • உண்மை எப்போதும் பேராபத்தானது என தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் அக்னிஹோத்ரி கண்டனம்

    புதுடெல்லி:

    கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டதற்கு, தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், கடும் அதிருப்தி தெரிவித்தார்.

    ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது' என அவர் கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் அக்னிஹோத்ரி பதில் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் நாடவ் லேபிட்டை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் இன்று பகிரங்கமாகக் கண்டித்துள்ளார்.

    இதுதொடர்பாக நோர் கிலோன், நாடவ் லேபிட்டுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியருப்பதாவது:-

    இந்திய கலாச்சாரத்தில் விருந்தாளியை கடவுள் போன்றவர் என்கிறார்கள். திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் உபசரிப்பையும் நீங்கள் மிகவும் மோசமாகு துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்.

    இதுபோன்ற கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். எந்த நியாயமும் இல்லை. இது இங்குள்ள காஷ்மீர் பிரச்சினையின் உணர்வுகளை காட்டுகிறது, Ynet-க்கு நீங்கள் அளித்த நேர்காணலில் இருந்து, தி காஷ்மீர் பைல்ஸ் மீதான உங்கள் விமர்சனத்திற்கும், இஸ்ரேலிய அரசியலில் என்ன நடக்கிறது என்பதில் உங்கள் அதிருப்திக்கும் இடையே உள்ள தொடர்பு தெளிவாகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும், இந்தியா-இஸ்ரேல் உறவுகள் மிகவும் வலுவானவை என்றும், நாடவ் லேபிட்டின் கருத்துகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் என்றும் தூதர் நோர் கிலோன் ட்வீட் செய்துள்ளார்.

    ×