என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ரஞ்சிதமே
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

ரஞ்சிதமே
இந்நிலையில் தெலுங்கில் உருவாகியுள்ள 'ரஞ்சிதமே' பாடலை நாளை (30.11.2022) காலை 9.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை அனுராக் குல்கரனி மற்றும் எம்.எம்.மானசி இணைந்து பாடியுள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட்டை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் கண்டித்துள்ளார்.
- உண்மை எப்போதும் பேராபத்தானது என தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் அக்னிஹோத்ரி கண்டனம்
புதுடெல்லி:
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டதற்கு, தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், கடும் அதிருப்தி தெரிவித்தார்.
‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது' என அவர் கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் அக்னிஹோத்ரி பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் நாடவ் லேபிட்டை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் இன்று பகிரங்கமாகக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக நோர் கிலோன், நாடவ் லேபிட்டுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியருப்பதாவது:-
இந்திய கலாச்சாரத்தில் விருந்தாளியை கடவுள் போன்றவர் என்கிறார்கள். திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் உபசரிப்பையும் நீங்கள் மிகவும் மோசமாகு துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்.
இதுபோன்ற கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். எந்த நியாயமும் இல்லை. இது இங்குள்ள காஷ்மீர் பிரச்சினையின் உணர்வுகளை காட்டுகிறது, Ynet-க்கு நீங்கள் அளித்த நேர்காணலில் இருந்து, தி காஷ்மீர் பைல்ஸ் மீதான உங்கள் விமர்சனத்திற்கும், இஸ்ரேலிய அரசியலில் என்ன நடக்கிறது என்பதில் உங்கள் அதிருப்திக்கும் இடையே உள்ள தொடர்பு தெளிவாகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும், இந்தியா-இஸ்ரேல் உறவுகள் மிகவும் வலுவானவை என்றும், நாடவ் லேபிட்டின் கருத்துகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் என்றும் தூதர் நோர் கிலோன் ட்வீட் செய்துள்ளார்.
- மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து.
- கோவா திரைப்பட விழாவில் இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

நாடவ் லேபிட்
அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார். அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தி காஷ்மீர் பைல்ஸ் - பிரகாஷ் ராஜ்
இந்நிலையில் நாடவ் லேபிட் தெரிவித்த கருத்து குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவமானம் இப்போ அதிகாரப்பூர்வமானது. சும்மா கேட்கிறேன் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார். இவரின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிடைத்து வருகிறது.
தேர்வுக்குழு தலைவரின் கருத்துக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் அக்னிஹோத்ரி, ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என அவர் காட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
- இவரை காமெடி நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் - ரஜினி
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ரோபோ சங்கர் தனது 22-வது திருமணநாளையொட்டி நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் குடும்பத்துடன் ரோபோ சங்கர்
ரோபோ சங்கர் இந்த சந்திப்பிற்காக ரஜினியிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், அவரது குடும்பத்தினரை நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து ரஜினி சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து
- கோவா திரைப்பட விழாவில் இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை.
புதுடெல்லி:
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார். அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேர்வுக்குழு தலைவரின் கருத்துக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் அக்னிஹோத்ரி பதில் அளித்துள்ளார். ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என அவர் காட்டமாக கூறி உள்ளார்.
- தெலுங்கு திரையுலகில் கடந்த 1978-ம் ஆண்டு ‘புனதிரல்லு’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிரஞ்சீவி.
- இவருக்கு சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் விருது வழங்கினார்.
தெலுங்கு திரையுலகில் கடந்த 1978-ம் ஆண்டு 'புனதிரல்லு' என்ற படம் மூலம் அறிமுகமான நடிகர் சிரஞ்சீவி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பயணித்து 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரைப்பட உலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் சமூக, கலாசார, கலைப்பணிகளுக்காக இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை கோவாவில் கடந்த 20-ந்தேதி தொடங்கிய 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் வெளியிட்டார்.

இந்த நிலையில் சிரஞ்சீவிக்கு கோவா விழாவில் நேற்று விருது வழங்கப்பட்டது. விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் இணை மந்திரி எல்.முருகன் முன்னிலையில் மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட சிரஞ்சீவி, மத்திய அரசு, பிரதமர் மோடி மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தன்னுடைய பெற்றோருக்கும், தெலுங்கு திரையுலகினருக்கும் நன்றி தெரிவித்தார். திரைப்படத்தொழிலுக்கு தன் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருப்பதாகவும் கூறினார்.
- மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் 3-ம் பாகம் விரைவில் உருவாகும் என்பதை இயக்குனர் ஜீத்து ஜோசப் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.

திரிஷ்யம்
'திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனியும் "திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்பதை தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ''திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் என்னிடம் உள்ளது. அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் விரைவில் தயாராகும்" என்றார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
- சமீபத்தில் ஸ்ரீநாத் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதித்தது.
- தற்போது ஸ்ரீநாத் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கி உள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் தனது, 'சட்டம்பி' படம் தொடர்பாக பேட்டி அளித்தபோது, ஒரு கேள்வியால் எரிச்சல் அடைந்து பெண்ணை ஆபாசமாக திட்டியதாக கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ரீநாத் மீது மராடு போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் ஸ்ரீநாத் மீது ஒரு பெண் பாலியல் புகாரும் தெரிவித்தார். அதன்பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஸ்ரீநாத்
ஸ்ரீநாத் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் ஸ்ரீநாத் படங்களில் நடிக்க தற்காலிக தடை விதித்தது. இதனால் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யாமல் அவரை ஒதுக்கினர். இந்த நிலையில் தற்போது ஸ்ரீநாத் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கி உள்ளது. இதனால் அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் 'சல்லியர்கள்'.
- இப்படத்தின் மூலம் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் 'சல்லியர்கள்'. இப்படத்தை நடிகர் கருணாஸ் தனது ஐசிடபுள்யூ தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கென் கருணாஸ் - ஈஸ்வர் - கருணாஸ்
இப்படத்தின் மூலம் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஈஸ்வர் என்ற அவருடைய நண்பருடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய கென் கருணாஸ், "இந்தப் படத்திற்கு என் நண்பன் ஈஸ்வர்தான் மெயின் இசையமைப்பாளர். நான் அவனுக்குப் பக்க பலமாக பணியாற்றியுள்ளேன்" என்றார்.
- பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ்.
- இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது.
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவரது படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கிறார்கள். இதனால் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி விட்டார். பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. ஆனால் காதலிப்பதை இருவருமே உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் தற்போது இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது. பிரபாஸ், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கிறார். இதில் சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கிருத்தி சனோன் அளித்த பேட்டியில், ''பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார். இருவரும் காதலிப்பதை இந்தி நடிகர் வருண் தவானும் மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார்.
- தெலுங்கில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளது.
- அரசியலில் இருந்து திரும்பிய பிறகு ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழாவில், ஆந்திர திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.

விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிரஞ்சீவி ஐ.எஃப்.எஃப்.ஐ, மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய அவர் கூறியுள்ளதாவது: கொனிடேலா சிவசங்கர வரபிரசாத் என்று என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோருக்கும், சிரஞ்சீவியாக எனக்கு மறுபிறவி கொடுத்த தெலுங்குத் திரையுலகுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். சினிமா துறைக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருக்கிறேன்.

அரசியலில் இருந்து திரும்பிய பிறகு என்னை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. எனக்கு கிடைத்த அனுபவத்திற்கும் ஆதரவிற்கும், அரசு மற்றும் திரைத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்தி, தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜெய் பீம் என்பது வெறும் வார்த்தையல்ல, ஒரு உணர்வு.
- ஒடுக்கப்பட்டவர்கள், அதிகாரம் பெறும்போது, உண்மையான இலக்கை அது அடையும்.
கோவாவில் நடைபெற்ற 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அந்த திரைப்பட இயக்குநர் ஞானவேல் கூறியுள்ளதாவது:
சட்டச்செயலாக்கம், நீதி பரிபாலனத்தில் உள்ள குறைபாடுகளை துணிச்சலான முறைகளில் படமாக சித்தரித்த ஜெய் பீம் என்பது வெறும் வார்த்தையல்ல அது ஒரு உணர்வு. ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக டாக்டர் பி ஆர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது.

ஜெய் பீம் படத்திற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கற்பனைக்கு எட்டாத வரவேற்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பிரச்சினை என்பதால், அது அனைவரையும் இணைத்துள்ளது. அநீதிக்கு எதிராக போராட அரசியல் சாசனம் தான் உண்மையான ஆயுதம், அதையேபடத்தில் சித்தரித்துள்ளேன்.
கல்வி ஒன்றே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் குரலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான வாழ்க்கையில், ஹீரோக்களுக்கு இடமில்லை. கல்வி மூலம் ஒருவர் தன்னைத் தானே ஹீரோவாக உயர்த்திக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள், அதிகாரம் பெறும்போது தான், என்னுடைய படம் தனது உண்மையான இலக்கை அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய ஜெய்பீம் திரை பட இணை தயாரிப்பாளர் கே ராஜசேகர், ஜெய் பீம் வரிசைப் படங்கள் விரைவில் தயாராகும், அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என்று தெரிவித்தார்.






