என் மலர்
சினிமா செய்திகள்
- ஜெய் பீம் என்பது வெறும் வார்த்தையல்ல, ஒரு உணர்வு.
- ஒடுக்கப்பட்டவர்கள், அதிகாரம் பெறும்போது, உண்மையான இலக்கை அது அடையும்.
கோவாவில் நடைபெற்ற 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அந்த திரைப்பட இயக்குநர் ஞானவேல் கூறியுள்ளதாவது:
சட்டச்செயலாக்கம், நீதி பரிபாலனத்தில் உள்ள குறைபாடுகளை துணிச்சலான முறைகளில் படமாக சித்தரித்த ஜெய் பீம் என்பது வெறும் வார்த்தையல்ல அது ஒரு உணர்வு. ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக டாக்டர் பி ஆர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது.

ஜெய் பீம் படத்திற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கற்பனைக்கு எட்டாத வரவேற்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பிரச்சினை என்பதால், அது அனைவரையும் இணைத்துள்ளது. அநீதிக்கு எதிராக போராட அரசியல் சாசனம் தான் உண்மையான ஆயுதம், அதையேபடத்தில் சித்தரித்துள்ளேன்.
கல்வி ஒன்றே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் குரலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான வாழ்க்கையில், ஹீரோக்களுக்கு இடமில்லை. கல்வி மூலம் ஒருவர் தன்னைத் தானே ஹீரோவாக உயர்த்திக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள், அதிகாரம் பெறும்போது தான், என்னுடைய படம் தனது உண்மையான இலக்கை அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய ஜெய்பீம் திரை பட இணை தயாரிப்பாளர் கே ராஜசேகர், ஜெய் பீம் வரிசைப் படங்கள் விரைவில் தயாராகும், அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என்று தெரிவித்தார்.
- வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி’.
- தற்போது தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் பூஜை தொடங்கியுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் அடுத்த வருடம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

வாத்தி
இதனிடையே தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் நடிகர்கள் குறித்த பிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டி.எஸ்.பி படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் செய்தியாளகர் சந்திப்பில் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
விஜய்சேதுபதி நடிப்பில் விக்ரம், மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 3 இந்தி படங்கள், ஒரு தெலுங்கு படம் கைவசம் உள்ளன. தற்போது தமிழில் பொன்ராம் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி - டி.எஸ்.பி
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி கூறும்போது, "நான் வணிக படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுவதுமாக மாற்றி விட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. கமல்ஹாசன் என்னை வாழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக கமல்ஹாசன் இருக்கிறார். அவர் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கிறார்" என்றார்.
- கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரேவதி.
- தற்போது இந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை ரேவதி இயக்கி வருகிறார்.
1983-ஆ ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரேவதி. அதன்பின் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். ரேவதி சில படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது இந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கஜோல், விஷால் மற்றும் ஜெத்வா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

ரேவதி - சல்மான் கான்
அதன் ஒரு பகுதியாக சல்மான்கான் நடத்தும் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட ரேவதி, 32 வருடங்களுக்குப் பிறகு சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மணீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் 'டைகர் 3' படம் உருவாகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார். மேலும் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரேவதி நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கபிலன் வைரமுத்து எழுதிய "ஆகோள்" இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.
- ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவாக உருவாகியுள்ளது.
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைர முத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920-ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது.

பாரதிராஜா
ஆகோள் குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில், சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பட்டிருக்கிறேன். இந்த கதையில் இடம்பெறும் தொழில்நுட்ப களம் குறித்தும், நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு இது பயனுள்ள பயணமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.
- தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பவித்ரா லோகேஷ்.
- இவர் தன்மீது அவதூறு கருத்துக்கள் பரப்புவதாக புகார் அளித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் தமிழில், 'கவுரவம்', 'அயோக்யா', 'க/பெ.ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரும் தெலுங்கு நடிகர் நரேஷும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சில மாதங்களுக்கு செய்திகள் வெளியாயின. நரேஷ், தமிழில் 'நெஞ்சத்தை அள்ளித்தா', 'பொருத்தம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்தபோது, நரேஷின் 3வது மனைவி ரம்யா, அவர்களை அடிக்கப் பாய்ந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்
பவித்ரா லோகேஷ் கன்னடம், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல குணசித்திர நடிகையாக இருக்கிறார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும் நடிகருமான 60 வயதாகும் நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர். பவித்ராவுக்கு 43 வயது ஆகிறது. இவரும் திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர்.

பவித்ரா லோகேஷ்
இந்நிலையில் பவித்ரா லோகேஷ் ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ''சில சமூக ஊடகங்களில் என்னை கேலி செய்து அவதூறு தகவல்கள் பரப்பி வருகின்றன. எனது பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு ஆபாச கருத்துகள் பதிவிடுகின்றனர். மார்பிங் செய்த புகைப்படங்களையும் பகிர்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
- விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் தயாராகியுள்ளது.
- ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 'வாரிசு' படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளதால், வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருந்தனர்.

வாரிசு
இதனிடையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

வாரிசு
விஜய்யின் வாரிசு திரைப்பட ரிலீஸ் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம் என்றும் அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்திருந்தார்.

வாரிசு
இந்நிலையில், வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என்றும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 'வாரிசு' அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
- இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ஃபைண்டர்'.
- இப்படத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரல் நடிக்கிறார்.
இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அரபி புரொடக்ஷன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைக்கிறார்.

ஃபைண்டர் படக்குழு
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஃபைண்டர் படக்குழு
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் நடைபெற்றது. மேலும், 'ஃபைண்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் இராம்நாடு பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
- நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். கீர்த்தி சுரேஷ் அதிக படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி அடங்குவது வழக்கம். இரு வருடங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த அரசியல் கட்சியுடன் தொடர்பு உடைய தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேசப்பட்டது. அதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தார் தற்போது மீண்டும் திருமண தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது.

கீர்த்தி சுரேசுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்து விட்டதாகவும், கீர்த்தி சுரேசும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. திருமணம் முடிவான காரணத்தினாலேயே திருநெல்வேலி அருகே உள்ள தனது பூர்வீக வீட்டுக்கும், அங்குள்ள கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பில் திருமணத்தை உறுதிப்படுத்தவில்லை.
- ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’.
- இப்படம் புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

பாபா
மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பாபா
இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தபடம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

டப்பிங் பணியில் ரஜினிகாந்த்
இந்நிலையில், 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- ராம் சரண் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆர்.சி.15 படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் தொடர்ந்து புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.சி.15
இதைத்தொடர்ந்து, நடிகர் ராம் சரண் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா எழுதி இயக்குகிறார். இதனை நடிகர் ராம் சரண் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

ராம் சரண் பதிவு
தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி கவனம் பெற்ற 'உப்பென்னா' திரைப்படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Excited about this !!
— Ram Charan (@AlwaysRamCharan) November 28, 2022
Looking forward to working with @BuchiBabuSana & the entire team.@vriddhicinemas @SukumarWritings #VenkataSatishKilaru @MythriOfficial pic.twitter.com/hXuI5phc7L
- நடிகர் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர்.
- இவர்களின் திருமணம் இன்று நடைபெற்றது.
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கவுதம் கார்த்திக் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும்படியாக நடக்கிறது. திருமணத்துக்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை என்று திருமண தேதியை உறுதிப்படுத்தினார்.

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
இந்நிலையில், கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






