உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'ஃபைண்டர்'

இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ஃபைண்டர்'.இப்படத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரல் நடிக்கிறார்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'ஃபைண்டர்'
Published on

இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அரபி புரொடக்‌ஷன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைக்கிறார்.

ஃபைண்டர் படக்குழு

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஃபைண்டர் படக்குழு

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் நடைபெற்றது. மேலும், 'ஃபைண்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் இராம்நாடு பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com