என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாம்பாட்டம்'.
    • இப்படத்தில் ஜீவன், மல்லிகா ஷெராவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'பாம்பாட்டம்'. இப்படத்தில் 'திருட்டு பயலே', 'நான் அவனில்லை' புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பாம்பாட்டம்

    ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள 'பாம்பாட்டம்' திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் வி.சி.வடிவுடையான் கூறியதாவது, "பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம்தான். அதுபோல ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான் 'பாம்பாட்டம்'. அந்த சாம்ராஜ்யம் சந்திக்கும் ஏற்ற, இறக்கங்கள்தான் படத்தின் கதை.


    பாம்பாட்டம்

    கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் கதை டிராவல் ஆகும். இதற்கான செட், உடைகள், அந்தந்த காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் சூழ்நிலை என நிறைய மெனக்கெடல் இருந்தது. மும்பையில் பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கினோம். படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். போர்க் காட்சிகளுக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. மும்பை தவிர, சென்னை, மைசூர் அரண்மனை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்." என்று கூறினார்.

    இப்படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.



    • இயக்குனர் சுவதீஸ் இயக்கத்தில் யோகி பாபு-ஓவியா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஓவியா இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு முதலில் 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் 'பூமர் அங்கிள்' என பெயர் மாற்றப்பட்டது.


    பூமர் அங்கிள்

    அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கிறார். சுரேஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிரேம்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


    பூமர் அங்கிள்

    காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 'பூமர் அங்கிள்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படம் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    கண்ணை நம்பாதே

    வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து, 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், 'ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு எமோஷனல் கதை இருக்கும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.


    கண்ணை நம்பாதே போஸ்டர்

    சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் கிரைம் திரில்லர் வகை படமாக வெளியான 'கலகத் தலைவன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'லவ் டுடே'.
    • இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுது. மேலும், இப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.


    லவ் டுடே போஸ்டர்

    அதுமட்டுமல்லாமல், 'லவ் டுடே' திரைப்படம் உலக அளவில் படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லவ் டுடே' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    • மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இதைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    மாமன்னன் படக்குழு

    அதில், தான் முதல் முறையாக மாமன்னன் படத்தின் மூலம் மாரிசெல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இயக்குனர் மாரி செல்வராஜ் பணியாற்றும் விதம் முற்றிலும் மாறுபட்டதாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.



    • ஜீவா தற்போது நடித்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம்.
    • இப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் வரலாறு முக்கியம். இந்த படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வரலாறு முக்கியம்

    சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரித்துள்ள இப்படத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    வரலாறு முக்கியம்

    வரலாறு முக்கியம் திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது வீட்டினுள் 15 போட்டியாளர்கள் இருக்கிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது ௧௫ நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 49-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாகும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காந்தாரா படத்தின் "வராக ரூபம்" பாடல்
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வராக ரூபம்' பாடலின் தடை நீக்கப்பட்டுள்ளது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.


    காந்தாரா

    இதையடுத்து, இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.



    காந்தாரா

    இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் வராக ரூபம் பாடல் இடம்பெறாமல் காந்தாரா திரைப்படம் வெளியானது. தற்போது இந்த பாடலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    • நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவுள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.
    • இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    காயங்களுடன் அருண் விஜய்

    இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், நடிகர் அருண் விஜய் 'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நீங்கள் திரையில் பார்க்கும் என்னுடைய அனைத்து கடினமான செயல்களுக்கு பின்னாலும் இது போன்ற ஏராளமான காயங்கள் உள்ளன. ஆனால், இப்போதும் ஸ்டன்ட் செய்ய விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் உங்களை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.




    • ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜெயில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ஜாக்குலின் சர்ச்சையில் சிக்கினார்.
    • இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார்.

    இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜெயில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை ஜாக்குலின் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜாக்குலின் வெளிநாடு செல்லாமல் இருக்க பாஸ்போர்டையும் முடக்கியது.


    ஜாக்குலின் பெர்ணாண்டஸ்

    தற்போது இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுகேஷ் சந்திர சேகருடனான தொடர்பு குறித்து நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் வாக்குமூலம் அளித்தார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையின்போது குற்றவியல் நடைமுறை சட்டம் 164-ன்படி மாவட்ட நீதிபதி முன்பு வாக்குமூலம் அளிப்பதாக இருந்தால் விவரங்களை பகிர்வதாக ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் நீதிபதி முன்னிலையில் அவர் வாக்குமூலம் அளித்தார். அதே நேரத்தில் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஜாக்குலின் மறுத்ததாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'.
    • இப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'. இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 'பட்டத்து அரசன்' திரைப்படம் கடந்த நவம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    பட்டத்து அரசன்

    இதைத்தொடர்ந்து நடிகர் 'களவாணி' துரை சுதாகர் 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "இதற்கு முன்பு களவாணி படத்தில் நடித்த போது நான் வருகிற காட்சியில் மக்கள் கூட்டம் நிறைய இருக்கும். ஆயிரம் பேர் மத்தியில் நடிக்க வேண்டி இருந்தது. அப்போது அது ஒரு சவாலாக இருந்தது. இப்போது பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.இப்படி ஒரு மெகா கூட்டணியில் இடம் பெறும் வாய்ப்பு எப்போதும் அமைந்து விடாது.


    பட்டத்து அரசன்

    அதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதுமே இயக்குனர் சற்குணம் கதைக்கேற்ற முகங்களைத்தான் தேடுவார். அப்படித்தான் இதிலும் அனைவரையும் பாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்து நடிக்க வைத்தார். அனைவரது கதாபாத்திரங்களையும் மிகவும் அழகாகச் சித்தரித்திருப்பார். எனவே நான் பெரிதாக நடித்தேன் என்று சொல்வதை விட அவர் அப்படி வடிவமைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் எப்போதும் தான் மட்டும் வளர வேண்டும், தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் அல்ல. தன் படத்தில் உள்ளவர்களும் தான் அறிமுகப்படுத்தியவர்களும் வளர வேண்டும் என்று நினைப்பவர் .


    துரை சுதாகர்

    தன் ஒவ்வொரு படத்திலும் யாரையாவது அறிமுகம் செய்து கொண்டே இருப்பார். அப்படி இந்தப் படத்தில் கலை இயக்குனரையும் கதாநாயகியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனவே, என்னைப் போலவே அவரும் மேலும் மேலும் வளர வேண்டும் பெரிய வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று நான் விரும்பி வாழ்த்துகிறேன். அவருக்கு இந்த நேரத்தில் மனம் நெகிழ்ந்து நன்றி கூறிக் கொள்கிறேன். நன்றி" இவ்வாறு கூறினார்

    • வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.
    • இப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    நாய் சேகர்

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'பணக்காரன்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. வடிவேலு, சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    வடிவேலு

    'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




    ×