என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.
    • இப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    நாய் சேகர்

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'பணக்காரன்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. வடிவேலு, சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    வடிவேலு

    'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சல்லியர்கள்’.
    • இந்த படத்தை கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர்.

    'மேதகு' படத்தை இயக்கிய இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சல்லியர்கள்'. ஐ.சி.டபில்யூ நிறுவனம் சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சத்யா தேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன் மற்றும் மகேந்திரனும் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.


    சல்லியர்கள் பட இசை வெளியீட்டு விழா

    சென்னையில் நடைபெற்ற இந்தபடத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம்நாத் பழனிக்குமார், தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பெ.மணியரசன், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சட்ட தரணி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    சல்லியர்கள் பட இசை வெளியீட்டு விழா

    இந்நிகழ்ச்சியில் நடிகர் கருணாஸ் பேசியதாவது, "நான்கு நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்த சமயத்தில்தான் இயக்குனர் கிட்டு என்னை அழைத்து, மாவீரர் பிறந்தநாளில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தினால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டார். அப்படி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த விழா. இந்த படத்தில் எனது மகனின் நண்பர் ஈஸ்வரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். என் மகனும் அவனுடன் இணைந்து இசையமைப்பு பணிபுரிந்துள்ளார் என்றாலும் அவர் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்.


    சல்லியர்கள் பட இசை வெளியீட்டு விழா

    இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இங்கே தமிழகத்தில் விஸ்காம் படித்த மாணவர்களுக்கு படிப்பை முடித்தபின் நல்ல தளம் கிடைப்பதில்லை. வருடத்திற்கு 2500 மாணவர்கள் படித்துவிட்டு வெளிவருகின்றனர். இவர்களுக்கு உதவிசெய்ய வேண்டிய சினிமாவில் உள்ள தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் பஜ்ஜி, வடை சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

    1985-லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் என்பதை பெருமையாக சொல்கிறேன். இன்று அவர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் கூட பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி பின்னால் வரும் கென், ஈஸ்வர் போன்ற இளைஞர்களிடம் கொடுத்து விடுகிறேன். அவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும். இதுதான் என்னுடைய விஷன்.. இதற்கு எவ்வளவு செலவானாலும் பத்து பேரிடம் பிச்சை எடுத்தாவது அந்த பணத்தை கொடுப்பேன்" என்று கூறினார்.

    • விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிஎஸ்பி'.
    • இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.


    டிஎஸ்பி படக்குழு

    மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    விஜய் சேதுபதி

    இதையடுத்து 'டிஎஸ்பி' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, "நான் கமர்ஷியல் படங்கள் அதிகமாக செய்வதில்லை. இயக்குனர் பொன்ராமுடன் படம் செய்வேன் என நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுதாக இப்படத்தில் மாற்றிவிட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது.


    கமல்ஹாசன்

    கமல்ஹாசன் அவர்கள் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும் உங்களுக்கு எங்களின் நன்றி" என்று பேசினார். 

    • 'துணிவு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


    ஜிப்ரான் - மஞ்சுவாரியர்

    இந்நிலையில், இப்படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை மஞ்சுவாரியர் 'துணிவு' திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "துணிவு படத்தின் ஒரு இன்ட்ரெஸ்டிங் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதை கேட்க காத்திருக்கிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.



    • விஷ்ணு விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.
    • இந்த படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.


    கட்டா குஸ்தி

    'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    கட்டா குஸ்தி

    இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான 'மைக் டைசன்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில், 'சேலைக்கிட்ட மாட்டிக்கிட்டா வேட்டியதான் ஏத்திக்கட்டு' என்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. 'கட்டா குஸ்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 48-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் எனக்கு ஒரு வழக்கு இருக்கு பிளேட்டை சுத்தம் செய்யாமல் வைத்து விட்டு போனது யாரு? குற்றவாளி எங்க? இப்ப நான் விசாரிக்கும் போது பெயராது வெளி வந்தது. என்னுடைய வழக்கு இவ்வளவு பாதுகாப்பாக விளையாடினால் இது மிகவும் சுவாரஸ்யமற்ற சீசனாக இருக்கும் என்று கமல் பிக்பாஸ் போட்டியாளர்களை வெளுத்து வாங்குகிறார். இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • நடிகர் கமல்ஹாசன் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
    • இவர் விஜய் சேதுபதி 'டிஎஸ்பி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

    நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். சமீபத்தில் ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சென்னை திரும்பினார்.


    கமல்ஹாசன்

    இதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.


    கமல்ஹாசன்

    அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம் உடல்நலம் குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு கமல் கூறியதாவது, "முன்பு பெரிய விபத்து எல்லாம் நேர்ந்தபோதுகூட அடுத்தப் படத்தின் ஷுட்டிங் எப்போது என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால்கூட என்னைப் பற்றி பெரிய செய்திகள் எல்லாம் வருகிறது. அதற்கு காரணம், ஒன்று ஊடகம், பெருகிவரும் அன்பு என்று நான் நம்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • அஞ்சலி தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'ஃபால்'.
    • இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.

    'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.


    ஃபால்

    இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபால்' வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் தொடரின் ரீமேக்காகும். இதில், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    ஃபால்

    இந்த தொடருக்கு அஜேஷ் இசையமைக்க கிஷன் சி செழியன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இத்தொடரை இயக்குவது மட்டுமல்லாமல் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் இயக்குனர் சித்தார்த் ராமசாமி. இந்த தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    ஃபால்

    இந்நிலையில், இந்த தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்ததாக வெளியாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. 'ஃபால்' வெப் தொடர் வருகிற டிசம்பர் 9 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகை ரிச்சா சதாவின் பதிவு வருத்தமளிப்பதாக அக்‌ஷய் குமார் தெரிவித்திருந்தார்.
    • தற்போது அக்‌ஷய் குமாரை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    பாலிவுட்டில் ராம் லீலா, சாக் அண்ட் டஸ்டர், மசான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த இந்திய ராணுவ வீரரின் பதிவிற்கு "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார்.


    ரிச்சா சதா

    இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து  தனது பதிவிற்கு வருத்தம் தெரிவித்து ரிச்சா சதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.


    அக்‌ஷய் குமார்

    இதனிடையே நடிகர் அக்‌ஷய் குமார், ரிச்சா சதாவின் "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என்ற பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து "இதைப் பார்க்கையில் வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப்படைகளுக்கு நன்றியின்றி இருக்கக் கூடாது. அவர்கள் இருப்பதால்தான் நாம் இன்று இருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.


    பிரகாஷ் ராஜ்

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், "உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்‌ஷய் குமார். உங்களை விட நடிகை ரிச்சா சதா சொன்னது நம் நாட்டுக்கு பொருத்தமாக இருக்கிறது" என அக்‌ஷய் குமாரை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா.
    • இவர் தற்போது 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ராஷ்மிகா மந்தனா

    தொடர்ந்து இவர், மிஷன் மஜ்னு, புஷ்பா -2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசியிருந்தார். அப்போது படத்தை தயாரித்த ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.


    ராஷ்மிகா மந்தனா

    இதனால் கோபமடைந்த கன்னட ரசிகர்கள் தன்னை வளர்த்து விட்ட கன்னட திரையுலகை மறந்துவிட்டு ராஷ்மிகா தற்போது தமிழ், இந்தியில் கவனம் செலுத்தி வருவதாக கூறி வருகின்றனர். மேலும், ராஷ்மிகா கன்னட திரையுலகில் நடிப்பதற்கு தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


    ராஷ்மிகா மந்தனா

    கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்த ரக்‌ஷித் ரெட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில் ராஷ்மிகா சில காரணங்களால் திருமண முடிவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நகைச்சுவை நடிகர் சூரியிடம், நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டது.
    • இது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நகைச்சுவை நடிகர் சூரியிடம், நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


    சூரி

    நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். சமீபத்தில் 4-வது முறையாக நடிகர் சூரி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் அவரிடம் இந்த விசாரணை நடந்தது.

    இதைத்தொடர்ந்து, நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை டிசம்பர் மாதம் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

    • பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம்பி’.
    • இப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் 'செம்பி'. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.


    செம்பி

    ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'செம்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    செம்பி போஸ்டர்

    அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    ×