என் புகைப்படங்களை மார்பிங் செய்தும், ஆபாச கருத்துகளையும் பதிவிடுகின்றனர் - பிரபல நடிகை புகார்

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பவித்ரா லோகேஷ்.இவர் தன்மீது அவதூறு கருத்துக்கள் பரப்புவதாக புகார் அளித்துள்ளார்.
பவித்ரா லோகேஷ்
பவித்ரா லோகேஷ்
Published on

பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் தமிழில், 'கவுரவம்', 'அயோக்யா', 'க/பெ.ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரும் தெலுங்கு நடிகர் நரேஷும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சில மாதங்களுக்கு செய்திகள் வெளியாயின. நரேஷ், தமிழில் 'நெஞ்சத்தை அள்ளித்தா', 'பொருத்தம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்தபோது, நரேஷின் 3வது மனைவி ரம்யா, அவர்களை அடிக்கப் பாய்ந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்
நரேஷ் - பவித்ரா லோகேஷ்

நரேஷ் - பவித்ரா லோகேஷ்

பவித்ரா லோகேஷ் கன்னடம், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல குணசித்திர நடிகையாக இருக்கிறார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும் நடிகருமான 60 வயதாகும் நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர். பவித்ராவுக்கு 43 வயது ஆகிறது. இவரும் திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர்.

பவித்ரா லோகேஷ்
பவித்ரா லோகேஷ்

பவித்ரா லோகேஷ்

இந்நிலையில் பவித்ரா லோகேஷ் ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ''சில சமூக ஊடகங்களில் என்னை கேலி செய்து அவதூறு தகவல்கள் பரப்பி வருகின்றன. எனது பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு ஆபாச கருத்துகள் பதிவிடுகின்றனர். மார்பிங் செய்த புகைப்படங்களையும் பகிர்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com