என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சிரஞ்சீவி"

    • தெலுங்கில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளது.
    • அரசியலில் இருந்து திரும்பிய பிறகு ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழாவில், ஆந்திர திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். 


    விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிரஞ்சீவி ஐ.எஃப்.எஃப்.ஐ, மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய அவர் கூறியுள்ளதாவது: கொனிடேலா சிவசங்கர வரபிரசாத் என்று என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோருக்கும், சிரஞ்சீவியாக எனக்கு மறுபிறவி கொடுத்த தெலுங்குத் திரையுலகுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். சினிமா துறைக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருக்கிறேன். 


    அரசியலில் இருந்து திரும்பிய பிறகு என்னை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. எனக்கு கிடைத்த அனுபவத்திற்கும் ஆதரவிற்கும், அரசு மற்றும் திரைத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்தி, தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது.
    • அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. இது குறித்து தெலுங்கு திரையுலக மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கு மாநிலங்களில் பெய்து வரும் மழையின் பாதிப்பு அதிக அளவு உள்ளது. பல கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    இதுபோன்ற சூழ்நிலைகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய ஒரே வேண்டுகோள் அவசரமில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

    வைரஸ் காய்ச்சல் அபாயம் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது எங்கள் ரசிகர்கள் எப்போதும் மக்கள் மற்றும் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் தற்போதும் மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாழ்நாள் முழுவதும் சினிமாவிற்காக அர்ப்பணிக்க உள்ளேன்.
    • சினிமா சேவைகளுக்காக மட்டும் கட்சி தலைவர்களை சந்திப்பேன்.

    திருப்பதி:

    தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு ஆந்திரா தெலுங்கானாவில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி பிரஜ்ஜா ராஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சினிமாவில் மெகா ஸ்டாராக விளங்கிய நடிகர் சிரஞ்சீவியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.

    இதனால் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டு எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு நடிகர் சிரஞ்சீவி அரசியலில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பிரம்மானந்தம் என்ற திரைப்பட வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.

    ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதன் வெளியீட்டு விழாவும் முக்கியம். அப்போதுதான் அந்த திரைப்படம் ரசிகர்களை விரைவாக சென்றடையும்.

    நான் அரசியலுக்கு திரும்புவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் சினிமாவிற்காக அர்ப்பணிக்க உள்ளேன். மீண்டும் நான் அரசியலுக்கு வர மாட்டேன். சினிமா சேவைகளுக்காக மட்டும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
    • முன்னணி நடிகர்களும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கி வருகிறார்.

    தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பயனாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார் இதில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். 


    மேலும் சிரஞ்சீவி அறக்கட்டளை சார்பில் இதுவரை 9,30,000 யூனிட் இரத்தம் மற்றும் 4,580 ஜோடி கண்தானம் செய்ததற்காக அப்போது ஆளுநர் பாராட்டு மற்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.

    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து வரும் சிரஞ்சீவியை பின்பற்றி மற்ற முன்னணி நடிகர்களும் ஏழை, எளிய கலைஞர்களுக்கும், மக்களுக்கும் உதவ வேண்டுமென தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×