புதிய கெட்டப்பில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'.இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஜித் 
அஜித் 
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

போனி கபூர் - அஜித் 
போனி கபூர் - அஜித் 

போனி கபூர் - அஜித் 

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

அஜித்தின் புதிய கெட்டப் 
அஜித்தின் புதிய கெட்டப் 

அஜித்தின் புதிய கெட்டப் 

இந்நிலையில் அஜித்தின் தற்போதைய புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் படப்பிடிப்புக்கு முந்தைய புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com