என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சி இன்றுடன் 86 நாட்களை நெருங்கியுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 86 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், ரக்ஷிதா இதுவரைக்கும் என்ன செய்தீர்கள் என்று அசீம் கேட்கிறார். அதற்கு எந்த டாஸ்க்லையும் நான் பண்ணுனத நீங்க பாத்ததே இல்லையா. ரீல் முகம் ரியல் முகம் எல்லாம் நான் நடிச்சிட்டேன் அசீம் இங்க வந்து நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்ல என்று வாதிடுகிறார். இதற்கு சரி இங்க வந்து ஸ்டார்ட் கேமரா இல்லாம நடிச்சிட்டு இருக்கீங்களா என்று வெளுத்து வாங்குகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மைக்கேல்’.
    • இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர்.

    புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    மைக்கேல் பட போஸ்டர்

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மைக்கேல்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி.
    • இவர் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து வருகிறார்.

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவம் நிவின் பாலி. இவர் நடித்த 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், 'நேரம்', 'ஓம் சாந்தி ஓசானா'போன்ற பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இவர் நடித்த 'பிரேமம்' திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது முதல் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் இருந்து வருகிறது.


    நிவின் பாலி

    இவர் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நிவின் பாலி அதீத எடையுடன் காணப்பட்டார். இதனால் இவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், நடிகர் நிவின் பாலியின் புதிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    நிவின் பாலி

    அதில், இவர் தன் உடல் எடையை குறைத்து பழைய எடைக்கு திரும்பியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 'திரும்பி வந்துட்டேனு சொல்லு' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'.
    • இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. வாரிசு படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியிருந்தது.


    வாரிசு போஸ்டர்

    இந்நிலையில், 'வாரிசு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் 'வாரிசு' திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் 'சோல் ஆஃப் வாரிசு' (Soul of Varisu) பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வாரிசு

    வாரிசு

    'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. வாரிசு படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியிருந்தது.

     

    வாரிசு

    வாரிசு

    இந்நிலையில் வாரிசு படத்தின் ரன்னிங் டைம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாரிசு திரைப்படம் 2.50 மணி நேரம் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • பிக்பாஸ் 6-வது சீசன் 84 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் வார இறுதியில் கமல் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரை செய்வார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 84 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ்

    பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் வார இறுதியில் கமல் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரை செய்வார். அதுபோன்று கடந்த வார இறுதியில் காவல் கோட்டம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் மதுரை பாராளுமன்ற தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நூலினை பரிந்துரை செய்தார்.


    சு.வெங்கடேசன்

    இதற்கு நன்றி தெரிவித்து சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்தகப் பரிந்துரை பகுதியில் திரைக்கலைஞரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான திரு. கமல்ஹாசன் வேள்பாரியை பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.



    • ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பத்து தல

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தனர். இதையடுத்து கவுதம் கார்த்திக் தனது டப்பிங் பணிகளை முடித்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


    பத்து தல

    இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். 'பத்து தல' திரைப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
    • ராஜமவுலி இயக்கத்தில் கமல் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.

    'மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.' போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்-நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். 'பாகுபலி'யில் நடித்த பிறகே பிரபாசின் திரையுலக மார்க்கெட் உயர்ந்தது. 'ஆர்.ஆர்.ஆர்.' படம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்துள்ளது. தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது சூப்பர் மேன் கதை சாயலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

     


    இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனும், ராஜமவுலியும் சந்தித்தனர். அப்போது இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இருவர் தரப்பிலும் இதனை உறுதிப்படுத்தவில்லை. தற்போது கமல்ஹாசன் 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம், பா.இரஞ்சித் இயக்கும் படங்களிலும் கமல் நடிக்க உள்ளார். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படமும் கமலின் கைவசம் உள்ளது.

    • நடிகர் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியதற்காக பத்திரிகையாளர் பிஸ்மி வீட்டிற்கு சென்று ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நடிகர் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்றும் விஜய்தான் இன்றைய சூப்பர் ஸ்டார் என்றும் பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து ரஜினி ரசிகர்கள் பிஸ்மி வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


    சீமான்

    இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல; ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.

    தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக் காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழத்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ரஜினிகாந்த் திரைத்திரையில் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின். தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக விஜய் உச்சத்தில் இருக்கிறார்.

    இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான பிஸ்மியை, அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த திரு. ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று.


    சீமான் அறிக்கை

    ஐயா ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால் அப்படியானவர்களில் சிலரே. மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று. ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது.

    இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஐயா ரஜினிகாந்த் அவர்களே இதனை விரும்பமாட்டார்கள். இத்தகைய செயல்களானது ஐயா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.




    • மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.


    பொன்னியின் செல்வன் டப்பிங் பணியில் பார்த்திபன்

    இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ மற்றும் போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தில் டப்பிங் பணியில் நடிகர் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.




    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.
    • இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

    துணிவு

    துணிவு

     

    'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'துணிவு' திரைப்படம் 2.25 மணி நேரம் ரன்னிங் டைம் உள்ளதாக தகவல் வெளியானது.


    துணிவு

    துணிவு


     இந்நிலையில் துணிவு திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தைகளையும், வடக்கன்ஸ் என்ற வார்த்தையையும் மியூட் செய்யும்படி படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    • தமிழில் கடந்த மாதம் கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் வெளியாகின.
    • இதுகுறித்து சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகரின் பதிவிக்கு பதிலளித்துள்ளார்.

    தமிழில் கடந்த மாதம் கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட் ஆகிய பெண்களை முதன்மைபடுத்தும் கதாபாத்திரங்களை கொண்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து வரவேற்பை பெற்றன. தியேட்டர்களில் வைக்கப்பட்டு உள்ள இந்த படங்களின் பேனர்களை ஒருவர் புகைப்படும் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து, ''தமிழ் சினிமா முன்னேற்ற பாதையில் செல்கிறது. 10 வருடங்களுக்கு முன்னால் இதுபோன்று நினைத்து பார்க்க முடியாது'' என்ற பதிவையும் பகிர்ந்து இருந்தார்.




    இந்த போஸ்டர்களை பார்த்த சமந்தா பெண்கள் எழுச்சி பெறுகிறார்கள் என்ற பதிவை பகிர்ந்து இருந்தார். அதற்கு ஒருவர், ''ஆமாம் பெண்கள் எழுவது விழுவதற்காகத்தான்'' என்று எதிர்மறையாக பதில் சொல்லி இருந்தார். அந்த ரசிகருக்கு சமந்தா பதிலடி கொடுக்கும் வகையில், ''விழுந்து மீண்டும் எழுவது மேலும் வலிமையாக்கும் நண்பரே'' என்று கூறியுள்ளார். இன்னொரு ரசிகர் பதிவுக்கு பதில் அளித்த சமந்தா, ''அனைவரின் பிரார்த்தனை எனக்கு மேலும் வலிமை தருகிறது'' என்றும் கூறியுள்ளார்.

    ×