என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’.
    • இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.


    வாரிசு

    இந்நிலையில், 'வாரிசு' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி தற்போது 87 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில் இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 86 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் அசீம் சைக்கிளில் உட்காருவதற்கு 10 நிமிடம் மேல் ஆனதால் பிக்பாஸ் அசீமை விளையாட்டை விட்டு வெளியேற சொல்கிறார். இதனால் அசீம் உங்களுக்காகவும் ரக்ஷிதாவுக்காகவும் மட்டுமே நான் மாறுனேன் என்று ஷிவினிடம் சண்டைப் போடுகிறார். இதற்கு ஷிவின் விளக்கம் கொடுக்கிறார் ஆனால் அசீம் கடைசியாக பாதிக்கப்படுவது நீங்களா..? நானா..? என்று கூறிவிட்டு அடுத்த கேம் உங்க ரெண்டுபேத்தையும் வச்சி செய்வேன் என்று சொல்லிவிட்டு கோபத்துடன் செல்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாரிசு'.
    • இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.


    வாரிசு

    இப்படத்தின் டிரைலர் இன்று (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 'வாரிசு' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த டிரைலரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • ’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ்.
    • இந்நிறுவனம் திரைத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    'கே.ஜி.எஃப். 1', 'கே.ஜி.எஃப் 2', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். இந்நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, " எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த நட்புறவு தொடரும் என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    சினிமா, வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது. நேர்நிலையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாக இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது, இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம்.


    ஹோம்பாலே பிலிம்ஸ் அறிக்கை

    பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியாவிலுள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக்கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

    ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது 'சலார்', 'ரகு தாத்தா', 'டைசன்', 'ரிச்சர்ட் ஆண்டனி' போன்ற படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ்.
    • இவர் தற்போது ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் 'ஜெய ஜெய ஜெய ஹே'படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.


    பிரித்விராஜ்

    இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    • எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.
    • இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழாவில் படக்குழு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    மேப்பிள் லீஃப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "கட்டில்". இப்படத்திற்கு வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

     

    கட்டில் படக்குழு

    கட்டில் படக்குழு


    இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழாவில் படக்குழு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இதில் இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு பேசியதாவது, நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி.

    கட்டில் படக்குழு

    கட்டில் படக்குழு

     

    ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி. நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி என்றார்.


    கட்டில் படக்குழு

    கட்டில் படக்குழு

    நடன இயக்குனர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது, அந்தக் காலத்தில் காதலுக்கு குழந்தைக்கு எனத் தனித்தனியாக பாடல் இருக்கும் கதையோடு சேர்ந்து இருக்கும். இப்போது பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது. இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள். இப்படத்தில் நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். ஶ்ரீகாந்த தேவா சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். . படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி என்றார். 

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு அண்மையில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

    தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் இவர் நடித்த 'கனெக்ட்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது.


    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் தனது இரட்டை குழந்தைகளுடன் இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்களைச் சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • விஜய்-அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

    வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். துணிவு படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

     

    ராஜாவின் பார்வையிலே

    ராஜாவின் பார்வையிலே

    இந்நிலையில் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் வாரிசு-துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராஜாவின் பார்வையிலே படத்தை சில திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய், அஜித், இந்திரஜா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில், இளையராஜா இசையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.
    • இப்படம் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    நாய் சேகர் ரிட்டன்ஸ் போஸ்டர்

    'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' வருகிற ஜனவரி 6-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் தளபதி 67.
    • இப்படத்திற்கு இடையே லோகேஷ் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

     

    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    லோகேஷ் கனகராஜ் - விஜய்


    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

     

    ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்

    ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கதை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 67 படத்திற்கு பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றும் விரைவில் இந்த கூட்டணி இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ்-ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • 'ஒரு அடார் லவ்' படத்தை இயக்கி பிரபலமான ஓமர் லூலு, தற்போது 'நல்ல சமயம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • ‘நல்ல சமயம்' என்ற படத்தில் போதைப்பொருளை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாக மத்திய கலால் துறை படத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியது.

    மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த 'ஒரு அடார் லவ்' படத்தை இயக்கி பிரபலமான ஓமர் லூலு, தற்போது 'நல்ல சமயம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்த நிலையில் படத்தில் போதைப்பொருளை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை என்றும் சர்ச்சை கிளம்பியது.

    நல்ல சமயம்

    நல்ல சமயம்

     

    இதையடுத்து மத்திய கலால் துறை படத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நல்ல சமயம் படத்தை தியேட்டர்களில் இருந்து வாபஸ் பெறுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

    இதையடுத்து தியேட்டர்களில் நல்ல சமயம் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. கலால் துறை நோட்டீசை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், தீர்ப்பு வந்த பிறகு படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவேன் என்றும் ஓமர் லூலு அறிவித்து உள்ளார்.

    • இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் திரைப்படம் 'பொம்மை நாயகி'.
    • இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடற்கரையில் குழந்தைக்கு எதையோ யோகிபாபு காட்டுவது போன்று இடம்பெற்றிருந்த அந்த போஸ்டர் ரசிக்ரகளை கவர்ந்தது.

     

    பொம்மை நாயகி

    பொம்மை நாயகி

     

    இந்நிலையில் பொம்மை நாயகி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ×