லோகேஷ் கனகராஜுடன் இணையும் ஜெயம் ரவி?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் தளபதி 67.இப்படத்திற்கு இடையே லோகேஷ் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜுடன் இணையும் ஜெயம் ரவி?
Published on

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் - விஜய்
லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்
ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்

ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கதை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 67 படத்திற்கு பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றும் விரைவில் இந்த கூட்டணி இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ்-ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com