என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கேரளாவில் மலையாள திரையுலகில் அனந்து அனந்தபத்ரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கோவிந்தன் குட்டி.
    • கோவிந்தன்குட்டி மீது நேற்று மேலும் ஒரு இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து உள்ளார்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் அனந்து அனந்தபத்ரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கோவிந்தன் குட்டி. அதைதொடர்ந்து அசுர வித்து, ஹார்ட் பீட்ஸ், ஒன்வே டிக்கெட், ஸ்பிரிட் உள்பட ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர ஏராளமான டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது கோவிந்தன் குட்டி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த மாதம் எர்ணாகுளம் வடக்கு போலீசில் எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடிகர் கோவிந்தன் குட்டி மீது பாலியல் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் நடிகர் கோவிந்தன் குட்டி தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் வடக்கு போலீசார் நடிகர் கோவிந்தன் குட்டி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

     

    கோவிந்தன் குட்டி

    கோவிந்தன் குட்டி

    இதற்கிடையே புகாரை வாபஸ் பெறக்கூறி கோவிந்தன் குட்டியும், மலையாள சினிமா உலகை சேர்ந்த சிலரும் தன்னை மிரட்டுவதாக அந்த இளம்பெண் கூறிவந்தார். இதற்கிடையே நடிகர் கோவிந்தன் குட்டி முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து அந்த இளம்பெண் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் நடிகர் கோவிந்தன்குட்டி மீது நேற்று மேலும் ஒரு இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக எர்ணாகுளம் வடக்கு போலீசார் கோவிந்தன் குட்டி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாக்யராஜ் நடித்து இயக்கி 1994-ல் வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரகதி.
    • நடிகை பிரகதி தற்போது மறுமணம் செய்து கொள்ள தயாராகி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது.

    பாக்யராஜ் நடித்து இயக்கி 1994-ல் வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரகதி. தொடர்ந்து பெரிய மருது உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக வந்தார். ஜெயம், சிலம்பாட்டம், எத்தன், தோனி, கெத்து, தாரை தப்பட்டை போன்ற படங்களில் அம்மா, அண்ணி, அக்கா என்று குணசித்திர வேடங்களில் நடித்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

     

    பிரகதி

    பிரகதி


    பிரகதி தனது 20-வது வயதில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த நிலையில் பிரகதி தற்போது மறுமணம் செய்து கொள்ள தயாராகி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது.


    பிரகதி

    பிரகதி

    இதற்கு பிரகதி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது. ''எனக்கு இப்போது 47 வயது ஆகிறது. இந்த வயதில் மறுமணம் செய்து கொள்வது பற்றி யோசித்து பார்க்கவே முடியவில்லை. பல வருடங்கள் தனியாகவே இருந்து விட்டேன். வாழ்க்கையில் பல பிரச்சினைகளை தனியாகவே சந்தித்து மீண்டு இருக்கிறேன். இனிமேல் திருமணம் செய்து கொள்வது சரிவராது. வாழ்க்கையில் துணை இனிமேல் தேவை இல்லை'' என்றார்.

    • தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களை இயக்கிய ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' படத்தின் கதாநாயகனாக ராமராஜன் நடிக்கிறார்.
    • 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் இளையராஜாவுடன் ராமராஜன் கைகோர்த்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த ராமராஜன் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.


    சாமானியன் படக்குழு

     

    இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. ராமராஜன் படங்களுக்கு வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு 'சாமானியன்' என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.


    சாமானியன் படக்குழு


    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தயாரிப்பாளர் வி.மதியழகன் இயக்குனர் ஆர்.ராகேஷ் ஆகியோருடன் நடிகர் ராமராஜன் சென்று இளையராஜாவை சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது படப்பிடிப்பு குறித்து பல விவரங்களை இளையராஜா கேட்டு அறிந்துகொண்டுள்ளார். அப்போது மொத்த படமும் முடிந்ததுமே தன்னுடைய இசைப்பணிகளை துவங்குவதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார். விரைவில் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி நான்கு நாட்களில் நிறைவடைய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    • பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் சமீபத்தில் ஒரு தனியார் பிஸ்கட்டின் விளம்பரப்படத்தில் நடித்திருந்தார்.
    • இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட வசனத்தில் ஆரோக்கியமற்ற இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் சமீபத்தில் ஒரு தனியார் பிஸ்கட்டின் விளம்பரப்படத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட வசனத்தில் ஆரோக்கியமற்ற இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

     

    டெல்லியில் இருக்கும் சுதந்திர மருத்துவர்கள், குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தேசியக்குழு அமிதாப்பச்சனுக்கு எதிராக ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "நீங்கள் விளம்பரப்படுத்தி இருக்கும் பிஸ்கட் கோதுமையில் தயாரிக்கப்பட்டது என்று கூறியதன் மூலம் நுகர்வோரைத் தவறாக வழி நடத்தியிருக்கிறீர்கள். இதன் மூலம் வீட்டில் சமைத்த தரமான சத்தான உணவுகளை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இது இருக்கிறது.


    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

    பிஸ்கட் அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக சோடியம் ஆகியவற்றால் ஆனது. இது குழந்தைகளின் உடல் நலத்திற்கு உகந்தது அல்ல. உலக சுகாதார அமைப்பு வரையறுக்கப்பட்ட விதிகளில் இது இல்லை. குழந்தைகளைத் தாக்கும் அதிக உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், இன்னும் எதிர்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் நோய்களுக்கும் எளிதில் வழி வகுக்கும். அதனால் இந்த விளம்பரம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பாதிக்கும் என்று அஞ்சுகிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக்கடிதத்திற்கு அமிதாப்பச்சன் தரப்பிலிருந்து இன்னும் பதில் அளிக்கவில்லை. இதனால் அடுத்த வாரம் 2ம் கடிதத்தை அனுப்ப இருப்பதாக தெரிகிறது.

    • ரெயில் படியில் பயணம் செய்த சோனு சூட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது.
    • இதற்கு பதிலளித்து சோனு சூட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மும்பையில் புறநகர் ரெயில்களில் வாசலில் நின்று பயணம் செய்து ஒவ்வொரு ஆண்டும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க ரெயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனுசூட் ரெயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

     

    சோனு சூட்

    சோனு சூட்


    அவரின் வீடியோவை பார்த்த வடக்கு ரெயில்வே சோனுசூட்டை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரெயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    படியில் பயணம் செய்த சோனு சூட்

    படியில் பயணம் செய்த சோனு சூட்


    மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான பயணம் என்றும், இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். படங்களில் வேண்டுமானால் ரெயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றும்படி மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

     

    சோனு சூட்

    சோனு சூட்


    நடிகர் சூனு சூட் இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ளார். அதில், மன்னிக்கவும், சும்மா அங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரயிலின் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து செல்லும் அந்த லட்சக்கணக்கான ஏழைகள் எப்படி உணருவார்கள். இந்தச் செய்திக்கும், நாட்டின் ரயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து நாடு முழுவதும் பிரபலமடைந்தார் என்பதும் அதிலிருந்து சோனுசூட் எதைச்செய்தாலும் அது செய்தியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

     

    • நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘காலேஜ் ரோடு’.
    • இப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    கபாலி, பரியேறும் பெருமாள், வி1 போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த லிங்கேஷ் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'காலேஜ் ரோடு'. இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கியிருந்த இந்த படத்தில் மோனிகா, ஆனந்த்நாகு, அன்சர், அக்சய்கமல், பொம்முலக்ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவிபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

     

    காலேஜ் ரோடு

    காலேஜ் ரோடு


    எம்பி என்டர்டெயின்மெண்ட் தயாரித்த இந்த படத்திற்கு ஆப்ரோ இசையமைத்திருந்தார். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது. அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? என்ற கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினைகளை மையமாக வைத்து 'காலேஜ் ரோடு' வெளியானது.


    காலேஜ் ரோடு

    காலேஜ் ரோடு

    திரையரங்குகளில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிறிய பட்ஜெட்டில் வெளியான இப்படத்தின் வெற்றியால் சிறு பட தயாரிப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பதான்'.
    • இந்த படத்திலிருந்து வெளியான முதல் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

     

    பதான்

    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

     

    பதான்

    பதான்


    இப்படம் நாடு முழுவதும் 25-ந்தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் டப்பிங் செய்தும் வெளியாக உள்ளது. இந்நிலையில் 'பதான்' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநிலத்தில் ஷாருக்கானின் 'கட் அவுட்' அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் அருகே உள்ள கர்ணாவதியில் இருக்கும் வணிக வளாகத்தில் ஷாருக்கான் கட் அவுட்டை பதான் படத்தின் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டு இருந்தது. அந்த கட் அவுட்டை பஜ்ரங்தள் தொண்டர்கள் அடித்து உடைத்து, சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது.
    • இப்படத்தின் சரிவை சந்திப்பதற்காக தற்போது கமல் நடித்து உதவுள்ளதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடித்து உதவ இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

     

    உத்தமவில்லன்

    உத்தமவில்லன்

    இதுகுறித்து லிங்குசாமி கூறும்போது, ''உத்தமவில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடுதான் எடுத்தார்கள். ஆனால், அப்படத்தினால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதலில் நாங்கள் 'பாபநாசம்' படத்தை தயாரிக்கத்தான் முடிவு எடுத்தோம். ஆனால், கமல்ஹாசன் ஆசைப்பட்டதால் 'உத்தமவில்லன்' படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

     

    கமல்

    கமல்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெகன் விஜயா இயக்கியுள்ள 'பிகினிங்' படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'பிகினிங்' படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். இனிமேல் திரைப்பட பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். புதிய திரைக்கதை தயார் செய்துள்ளேன். இரண்டு மூன்று மாதங்களில் அந்த படத்தை இயக்குவேன்'' என்றார்.




    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு.
    • வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    சென்னை:

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

    வாரிசு படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    நடிகர் அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 11 அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
    • இந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடற்கரையில் குழந்தைக்கு எதையோ யோகிபாபு காட்டுவது போன்று இடம்பெற்றிருந்த அந்த போஸ்டர் ரசிக்ரகளை கவர்ந்தது.


    பொம்மை நாயகி போஸ்டர்

    இந்நிலையில், 'பொம்மை நாயகி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 



    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’.
    • ’வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.


    வாரிசு

    இந்நிலையில், 'வாரிசு' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    துணிவு

    'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தணிக்கைக் குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    துணிவு போஸ்டர்

    இந்நிலையில், 'துணிவு' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    ×