என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’.
    • இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.


    சாகுந்தலம் போஸ்டர்

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சாகுந்தலம் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற ஜனவரி 9-ஆம் தேதி நண்பகல் 12.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    சாகுந்தலம் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்‘கள்வன்’.
    • இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.


    ஜி.வி.பிரகாஷ் - பாரதிராஜா

    ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கள்வன்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    'கள்வன்' திரைப்படம் வருகிற கோடையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.



    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’.
    • இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இந்த படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    வாரிசு போஸ்டர்

    'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    ஜெயிலர் 

    ஜெயிலர் 


    ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு வீடியோவை வெளியிட்டிருந்தது.


    மோகன்லால் 

    மோகன்லால் 

    இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதில் மோகன்லால் இணைந்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். இருந்தும் இந்த தகவல் குறித்து படக்குழு தரப்பிலிருந்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    • விஜய் ஆண்டனி நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கொலைகாரன்’.
    • இவர் இயக்கிய ‘வதந்தி’ வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    கடந்த 2019 -ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்த திரைப்படம் 'கொலைகாரன்'. இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வதந்தி' வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    வதந்தி

    இந்நிலையில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தியின் 'சர்தார்' படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனம் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




    • 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
    • இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.


    போலா

    இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    போலா 

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், போலா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிட்டுள்ளது.



    • இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறை சேர்த்திருந்தது.
    • இந்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்தது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

     

    ஜாக்குலின்

    ஜாக்குலின்


    சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்திருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் விளக்கம் அளித்து வந்தார்.


    கோப்புபடம்
    கோப்புபடம்

    இந்த 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக நடிகை ஜாக்குலின் கடந்த மாதம் 12-ந்தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நடிகை ஜாக்குலின் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

    • ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் இன்று காலை உயிரிழந்தார்.
    • சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

    அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர், நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரஜினி மக்கள் மன்றம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

     

    ரஜினி - சுதாகர்

    ரஜினி - சுதாகர்


    தொடர்ந்து சுதாகரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.


    சுதாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி 
    சுதாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி 

    இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகரின் உடலுக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, சுதாகர் என்னுடைய நீண்ட கால நண்பர். ரொம்ப முயற்சிப்பண்ணோம் ஆனால் நம்மை விட்டு அவர் பிரிந்துவிட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. சுதாகருக்கு எப்பவுமே என்னை பற்றியே யோசனை. நான் சந்தோஷமா இருக்கனும், நான் நல்லா இருக்கனும்னு யோசிக்கக்கூடியவர். மிகவும் நல்ல மனிதர். நல்ல நண்பனை நான் இன்றைக்கு இழந்துவிட்டேன் என்றார்.

    • கலை இயக்குனர் சுனில் பாபு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
    • இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

    கேரளாவைச் சேர்ந்த சுனில் பாபு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 'துப்பாக்கி', 'எம்.எஸ்.தோனி', 'சீதா ராமம்', 'பெங்களூர் டேஸ்' என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இவர் கடைசியாக வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்தார்.


    சுனில் பாபு

    இந்நிலையில், சுனில் பாபு மாரடைப்பு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை நாயகி.
    • இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    பொம்மை நாயகி

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'பொம்மை நாயகி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'அடியே ராசாத்தி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    'பொம்மை நாயகி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் இன்று காலை உயிரிழந்தார்.
    • சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக பதவி வகித்து வந்தவர் சுதாகர். இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரஜினி மக்கள் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

     

    ரஜினி - சுதாகர்

    ரஜினி - சுதாகர்

    இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பது, "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சிரஞ்சீவியின் 154-வது படமாக உருவாகி வரும் படம் 'வால்டேர் வீரய்யா'.
    • இப்படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

     

    வால்டர் வீரய்யா

    வால்டர் வீரய்யா

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    வால்டேர் வீரய்யா

    வால்டேர் வீரய்யா


    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் நாளை (07.01.2022) வெளியாகும் என்றும் கிராண்ட் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் (Grand Pre Release Event) 08.01.2022 அன்று நடைபெறும் என்றும் போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×