என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.

    மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.


    பொன்னியின் செல்வன் -1

    இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த காஸ்ட்யூம் டிசைன்,சிறந்த புரொடக்ஷன் டிசைன் என 6 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரி நடிப்பில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார்.


    வெற்றிமாறன்

    இவர் குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது, "இதயம் மட்டும் எப்போதும் பிறப்பதற்கு முன்னரே துடிக்கத் தொடங்கி விடுகிறது. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது மட்டுமே பிட்னெஸ் கிடையாது. வாழ்க்கை முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.


    வெற்றிமாறன்

    நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாளுக்கு 70 சிகரெட் பிடிப்பேன். இயக்குனராக இருக்கும் போது 150 சிகரெட் வரை பிடிப்பேன். அப்போதுதான் நான் ஒன்றை உணர்ந்தேன். என்னால் என்னுடைய 100 சதவீதத்தை கொடுக்கமுடியவில்லை. இது தவறு என உணர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைபடி அதை விட்டு விட்டேன். எனது படங்களில் இனி புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் வருவதை முடிந்த அளவு தவிர்ப்பேன்" என்று கூறினார்.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சி இன்றுடன் 90 நாட்களை நெருங்கியுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


    ரக்ஷிதா

    இதில் தற்போது 8 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 90 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ரக்ஷிதா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் 'காந்தாரா' .
    • ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.


    காந்தாரா

    இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது. ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


    காந்தாரா போஸ்டர்

    இந்நிலையில், 'காந்தாரா' திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது. இது குறித்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைதளத்தில், "நாம் எப்போதும் போற்றும் ஒரு திரைப்படம் நமது வேர்களை திரும்பி பார்க்க வைத்து கலாச்சாரத்தின் மீது பிரம்மிப்பை ஏற்படுத்தும். இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.



    • பிரசாந்த் பன்னோக்கு மருத்துவமனை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறையுடன் இணைந்து ‘இதயத் திரைப்பட விழாவை’ நடத்தியது.
    • இதில் வெற்றி பெற்ற குறும்படங்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் விருது வழங்கினார்.

    சென்னையில் உள்ள பிரசாந்த் பன்னோக்கு மருத்துவமனை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறையுடன் இணைந்து 'இதயத் திரைப்பட விழாவை' நடத்தியது. இதில் பங்கேற்ற சிறந்த குறும்படங்களுக்கான விருதை இன்று பிரசாந்த் மருத்துவமனை அறிவித்தது.


    விருது வழங்கிய இயக்குனர் வெற்றிமாறன்

    இந்த விருதை இயக்குனர் வெற்றிமாறன் வழங்கினார். இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த குறும்படங்களுக்கு விருதுடன் முறையே ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது. மேலும்,'சேவ் யங் ஹார்ட்ஸ்' பிரச்சாரம் குறித்த இதழையும் அவர் வெளியிட்டார்.


    விருது வழங்கிய இயக்குனர் வெற்றிமாறன்

    இந்த நிகழ்ச்சி குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது, "இன்று நான் பார்த்த படங்கள் அனைத்தும் மிகவும் அற்புதமானவை. அவை உண்மையிலேயே இளைஞர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்றைய காலக்கட்டத்தில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. குறிப்பாக இளைஞர்களிடையே பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லயோலா கல்லூரி இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு இருப்பது குறித்துநான் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன்.வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

    • நடிகர் விமலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இந்த வதந்திகளுக்கு விளக்கமளித்து விமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விமல், தன் எதார்த்தமான நடிப்பால் தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு வெப்தொடர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    விமல்

    இவர் தற்போது அறிமுக இயக்குனர் மைக்கில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் விமலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    விளக்கமளித்த விமல்

    இந்நிலையில், இந்த தகவல் குறித்து நடிகர் விமல் கூறியதாவது, "எனக்கு மாரடைப்பு எதுவும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தற்போது மைக்கேல் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் மதுவுக்கு அடிமையாகி வீட்டிலேயே ரகசிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இது யார் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் இந்த சின்ன பிள்ளை வேலையெல்லாம் விட்டு விட்டு பிழைக்கிற வழிய பாருங்க. வாழவிடுங்க நீங்களும் வாழுங்க" என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • வம்சி இயக்கத்தில் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், நடிகர் ஷாம், விஜய்யின் நட்பு பற்றி கூறியதாவது, "குஷி படத்தில் நடித்த பிறகு இப்போதுதான் அவருடன் இணைந்து நடிக்கிறேன். நான் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இன்று அவர்கள் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார்கள். ஆனால் விஜய் அண்ணாவிடம் இருக்கும் அந்தப் பணிவும் அன்பும் யாரிடமும் இல்லை.


    விஜய் - ஷாம்

    நிறைய சொல்லிக்கொடுப்பார். நான் தில்லாலங்கடி படத்தில் நடித்தது பற்றி பாராட்டி பேசினார். அவர் வீட்டில் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். 'வாரிசு' படத்தில் நடித்தது ஒரு குடும்பத்தில் வாழ்ந்தது போல் இருந்தது. 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்" என்று கூறினார்.

    'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

    • அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    விக்னேஷ் சிவன் - அஜித்

    இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    சந்தானம் - அரவிந்த் சாமி

    இந்நிலையில், ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த சாமி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    • வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஜனவரி 11-ம் தேதி அன்று வெளியாகிறது.

    சென்னை:

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வாரிசு திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதேபோல, நடிகர் அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 11 அன்று வெளியாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு படங்களின் சிறப்புக் காட்சி பற்றிய தகவல் வெளியானது.

    அதன்படி, துணிவு திரைப்பட சிறப்புக் காட்சி ஜனவ்ரி 11-ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சி ஜனவரி 11-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட உள்ளது.

    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிக்’.
    • இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    கிக் பட டப்பிங் பணியில் சந்தானம்

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


    கிக் பட டப்பிங் பணியில் சந்தானம்

    இந்நிலையில், 'கிக்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சந்தானம் 'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.



    • இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை நாயகி.
    • இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    பொம்மை நாயகி

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'பொம்மை நாயகி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'அடியே ராசாத்தி' பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    பொம்மை நாயகி

    'பொம்மை நாயகி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் கற்றார் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ஏ.ஆர்.ரகுமான்

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது பிறந்தநாளான இன்று 'கற்றார் (KATRAAR)' புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும் பணமாக்கவும் அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது.

    ஏ.ஆர்.ரகுமான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை 'கற்றார்' தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 




    ×