என் மலர்
சினிமா செய்திகள்

வாரிசு, துணிவு படங்களின் சிறப்புக் காட்சி - அறிவிப்பு வெளியானது
- வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஜனவரி 11-ம் தேதி அன்று வெளியாகிறது.
சென்னை:
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வாரிசு திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேபோல, நடிகர் அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 11 அன்று வெளியாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு படங்களின் சிறப்புக் காட்சி பற்றிய தகவல் வெளியானது.
அதன்படி, துணிவு திரைப்பட சிறப்புக் காட்சி ஜனவ்ரி 11-ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சி ஜனவரி 11-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட உள்ளது.
Next Story






