என் மலர்
சினிமா செய்திகள்
- ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லால் இணைந்துள்ளார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி - மோகன்லால்
சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால் இணைந்தது உறுதியானது.

மோகன்லால்
மோகன்லால் ஏற்கனவே கமல்ஹாசனுடன் 'உன்னைப்போல் ஒருவன்', விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு திரைப்படங்களும் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இந்த இரண்டு ப்படங்களை வாழ்த்தி நடிகர் பேசியுள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாரிசு - துணிவு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர் நடித்துள்ள 'துணிவு' படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்துள்ள 'வாரிசு' படமும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் - அஜித்
இந்நிலையில் வாரிசு-துணிவு இரண்டு படங்களையும் நடிகர் பிரபு வாழ்த்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 'காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு சென்றிருந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு என இரண்டு படங்களுமே நன்றாக போகும். இரண்டு பேரும் நம்ம தம்பிகள்தான். இருவரின் படங்களும் வெற்றி பெறட்டும், சந்தோஷம்" என்றார்.
- விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படங்களின் டிரைலர்கள் வெளியாகி வைரலானது.
விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வருகிற 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

வாரிசு - துணிவு
வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். துணிவு மற்றும் வாரிசு படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாரிசு - துணிவு
இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு படங்களின் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்னையில் உள்ள ஒரு திரையரங்குகிற்கு ரசிகர்கள் திரண்டிருந்தனர். அச்சமயம் இரு தரப்பு ரசிகர்களும் துணிவு, வாரிசு என்று கோஷமிட இதனை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் ஆரோக்கியமாக தங்களின் படங்களின் பெயர்களை கூச்சமிட்டாலும், 'இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள..?' என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் தங்கலான்.
- இப்படத்திற்கு விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு கதாபாத்திரங்களுக்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பாராட்டு நடிகர் விக்ரமுக்கு உண்டு. இவர் பிதாமகன், தெய்வத்திருமகள், அந்நியன், பீமா, ஐ, இருமுகன், கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் என்று பல படங்களில் இதை நிரூபித்தும் இருக்கிறார். இப்போது 'தங்கலான்' படத்திலும் தன்னை உருமாற்றி உள்ளார் இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கி வருகிறார்.

தங்கலான்
கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பை கோலார் தங்க வயல் பகுதியிலேயே நடத்தி வருகிறார்கள். இந்த படத்துக்காக விக்ரம் சட்டை அணியாமல் வேட்டியை கோவணம் போல் கட்டிக்கொண்டு கையில் ஆயுதம் ஏந்தி மிடுக்காக நிற்கும் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த தோற்றத்துக்கு மாற விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீர சிம்ஹா ரெட்டி'.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வீர சிம்ஹா ரெட்டி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வீர சிம்ஹா ரெட்டி டிரைலரில் இடம்பெற்ற காட்சி
இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த டிரைலரில் ஹீரோயின் நெஞ்சில் சிகரெட்டை போட்டு தனது வாயில் பிடிக்கும் காட்சி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து சென்றாலும் பலரையும் அந்த காட்சி முகம் சுழிக்க வைத்துள்ளது. சிகரெட் பிடிப்பதே தவறு, இதில் ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பது சரியா என தெலுங்கு சினிமா ரசிகர்களே இணையத்தில் விளாசி வருகின்றனர். சுருதிஹாசன், ஹனிரோஸ் என இரு ஹீரோயின்கள் படத்தில் நடித்துள்ளனர். அவர்கள் இருவர் நெஞ்சிலும் இல்லை என்றும் குத்தாட்டப் பாடலில் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து புகழ் சந்திரிகா ரவியின் நெஞ்சில் தான் பாலகிருஷ்ணா சிகரெட் போட்டு பிடித்துள்ளார் என அவரது ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
- எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
- இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'துணிவு' படத்தின் இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் படம் குறித்து பேசியுள்ளார். அதில், மிகப் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும்போது, அவர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பிரஷர் கண்டிப்பாக இருக்கும். மேலும் வியாபாரம், கதை, ஹீரோ மெட்டிரியல் என பல விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வியாபாரம் சார்ந்த கதையை செய்தாலும், வியாபாரத்திற்காக மக்களிடம் தவறான கருத்தை விதைத்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறோம். அஜித், விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு நிச்சயம் பிரஷர் இருக்கும். அதை மறுக்க முடியாது, இருந்தும் படத்திற்காக இயக்குனர்கள் உழைப்பது என்பது பொதுவானதுதான். துணிவு திரைப்படத்தின் முதல் பாதி ரசிகர்களுக்காகவும், இரண்டாம் பாதி அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்றார்.
- வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாரிசு’.
- இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

வாரிசு
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்துள்ளது. வாரிசு படத்தின் குடும்பத்தினருடன் விஜய் இருப்பது போன்று இடம்பெற்றிருக்கும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Meet THE BOSS's family in 3 days in theatres near you nanba ?#3DaysForVarisu#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @Lyricist_Vivek @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/RbAsoqrpNS
— Sri Venkateswara Creations (@SVC_official) January 8, 2023
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'.
- இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
2008-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். அதன்பின் மீண்டும் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான திருசிற்றம்பலம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. அதில், திருசிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன்.வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வெளியிலிருந்து வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'.
- இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

கார்த்திக் நரேன்
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் விரைவில் 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர்
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு வீடியோவை வெளியிட்டிருந்தது. மேலும், இந்த படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஹைதராபாத் செல்லும் ரஜினி
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் ரஜினி 'ஜெயிலர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- சிறுத்தை சிவா தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'சூர்யா 42'.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42 படக்குழு
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

சூர்யா 42
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'சூர்யா 42' படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'வீர்' என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாடா’.
- இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

டாடா
இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டாடா
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டாடா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.






