என் பெயரில் வரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.. தனுஷ் பட இயக்குனர் பதிவு

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'.இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷ் - மித்ரன் ஜவஹர் 
தனுஷ் - மித்ரன் ஜவஹர் 
Published on

2008-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். அதன்பின் மீண்டும் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான திருசிற்றம்பலம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. அதில், திருசிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன்.வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வெளியிலிருந்து வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com