search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உலகத்துல பாதி பிரச்சினைக்கு காரணமே இந்த டாடா தான்.. கவனம் ஈர்க்கும் கவின் பட டீசர்..
    X

    கவின்

    உலகத்துல பாதி பிரச்சினைக்கு காரணமே இந்த 'டாடா' தான்.. கவனம் ஈர்க்கும் கவின் பட டீசர்..

    • இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாடா’.
    • இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.


    டாடா

    இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    டாடா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டாடா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.




    Next Story
    ×