என் மலர்
சினிமா செய்திகள்
- வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’.
- இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'வாரிசு' படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வாரிசு
இது தொடர்பாக தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதாவது, "தெலுங்கு ஹீரோக்கள் படங்களான 'வீர சிம்ஹா ரெட்டி', 'வால்டர் வீரய்யா' ஆகிய படங்களை முதலில் தியேட்டரில் பாருங்கள். இதன் காரணமாகதான் 'வாரசுடு' படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளோம்" என்று கூறினார்.

தில் ராஜு
மேலும், "நான் கதையைத்தான் நம்புகிறேன். நடிகர்கள் அஜித் , ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா,தனுஷ் ஆகியோருக்கு ஏற்ற கதை கிடைத்தால் எதிர்காலத்தில் அவர்களின் படத்தை தயாரிப்பேன்" என தெரிவித்துள்ளார்.
- கே.ஜி.எப் படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் யஷ்.
- இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கே.ஜி.எப் படத்தின் 3ம் பாகம் எழுதும் பணியில் இயக்குனர் பிரசாந்த் நீல் தீவிரமாக இருந்து வருகிறார். இரண்டாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடத்தப்பட்ட தங்கத்தை கப்பலில் கொண்டு செல்வதுபோல் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சியை காட்டியிருப்பார்கள். இதனால் 3-ம் பாகம் முழுவதும் கடலில்தான் கதை நடப்பதாக காட்டப்போகிறார் என்பதுபோல் சொல்லியிருப்பார். கடலில் நடக்கும் சாகச கதை இன்னும் மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள்.

கே.ஜி.எப்
இந்நிலையில், கே.ஜி.எப். 3-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 2025-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் 2026-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் ஐந்தாவது பாகம் முடிந்த பிறகு யஷ்ஷிற்கு பதில் வேறொரு ஹீரோவை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
- இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

துணிவு
வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

துணிவு
இந்நிலையில், 'துணிவு' படத்தின் புரோமோஷன் பணிகள் லண்டனில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோவை லைகா நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
The #THUNIVU ? promotional van ? at Big Ben & Tower Bridge at UK ??
— Lyca Productions (@LycaProductions) January 9, 2023
Comment if you had spotted it anywhere else! ???#MyThunivuPongal ? #ThunivuPongal ?#NoGutsNoGlory ??✨#AjithKumar ? #HVinoth ? @BoneyKapoor @ZeeStudios_ ? @BayViewProjOffl @BoleynCinema pic.twitter.com/HupvEkuJjJ
- இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘லாக்’.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் , சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்.
'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குனர் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

லாக் இசை வெளியீட்டு விழா
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, " பாக்யராஜ் எவ்வளவு நல்ல கருத்துக்களை நல்ல கதைகளை சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரைப் படத்தில் வைத்தது தான். இந்த விழாவுக்கு வந்த பலரும் அதைப் பற்றி பேசும் போது அவர் செய்த பெரிய தவறு இது என்று தோன்றுகிறது.
ஒரு படத்தில் இடைவேளையில் வருவதை இன்டர்வெல் பிளாக் என்பார்கள். இன்டர்வெல் லாக் என்பார்கள். சாதாரணமாக இருக்கிறது என்றால் இன்டர்வெல் பிளாக். அதில் ஒரு முடிச்சு போட்டுப் பிறகு அவிழ்த்து விடுவது தான் லாக். பாக்யராஜ் சார் அவர்களைத் திரைக்கதை மன்னன் என்பதை விட இடைவேளை மன்னன் என்று கூறலாம். ஏனென்றால் அவரது படங்களில் இடைவேளையில் அப்படி ஒரு முடிச்சு போட்டு விடுவார்.
அந்த முடிச்சை சரியாக அவிழ்த்தால் அந்த படம் வெற்றிப் படம். அவிழ்ப்பதற்குத் திணறினால் அது தோல்விப்படம். இயக்குனர் ரத்தன் லிங்காவைப் பார்க்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயக்குனர் ஆவது என்பது சிரமம். சில ஆண்டுகள் உதவி இயக்குனராக இருந்து, பிறகு இணை இயக்குனராக சில ஆண்டுகள் பணியாற்றி ,வெளியே வந்து கதை சொல்லி தயாரிப்பாளர் பிடித்து பிறகு தான் இயக்குனராக முடியும். ஆனால் இப்போதெல்லாம் எல்லாமே அவசரக்காலம். இரண்டு ஆண்டுகளுக்குள் படம் இயக்கி விட வேண்டும் என்று இன்று இருக்கிறார்கள்.
ஆனால் ரத்தன் லிங்கா படிப்படியாகக் குறும்படம், திரைப்படம் என்று வளர்ந்துள்ளவர். அப்படி வளர்ந்து இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவரது குறும்பட காலத்திலேயே அவரை இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், பிரதாப் போத்தன், மதன் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள் . அவர் நிதானமாகத்தான் படிப்படியாக முன்னேறியுள்ளார். அவசரத்தில் எதுவும் வெற்றி பெறாது .இந்தப் படத்தில் நமக்கு நாமே துணை என்று பெண்களுக்கு கருத்து சொல்லி உள்ளார். பெண்களைக் காப்பாற்ற எந்த கதாநாயகர்களும் வர மாட்டார்கள். அவர்கள் தான் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

லாக் இசை வெளியீட்டு விழா
பெண்கள், ஆண்களுக்கு நிகராகப் பல பணிகளைச் செய்யலாம் . ஆனால் ஆண்களைப் போலவே, ஆண்கள் மாதிரி வாழ நினைக்கக் கூடாது. அங்கே தான் நிறைய பெண்களுக்கு பிரச்சினை வருகிறது. நிறைய தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பெண்கள், ஆண் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தனது நண்பர்களை தைரியமாக அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்த வேண்டும் .அப்படி அறிமுகப்படுத்தாமல் மறைத்தால் பிரச்சினை வரும். குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தப்படும் நண்பன் எப்படிப்பட்டவன் என்று குடும்பத்தினர் கவனித்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் அனுபவசாலிகள் .
இருமல், தும்மல் போன்று தான் காமமும் .நம்மை மீறி வந்து விடும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் தான் பெண்களுக்குப் பெண்களே தான் பாதுகாப்பு என்று இந்தப் படத்தில் கூறி இருக்கிறார். இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்" என்று பேசினார்.
- நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம்.
- இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம்
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகை சமந்தா பேசியதாவது, "இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது.

சாகுந்தலம் டிரைலர் வெளியீட்டு விழா
வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் ஒன்று மாறாது. நான் சினிமாவை நேசிக்கிறேன், சினிமா என்னை மீண்டும் நேசிக்கிறது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை. இந்திய இலக்கிய வரலாற்றில், சகுந்தலாவின் கதை மறக்க முடியாத ஒன்றாகும். குணசேகர் சார் என்னை இந்தக் கேரக்டருக்குத் தேர்ந்தெடுத்தது என் அதிர்ஷ்டம். இது உண்மையிலேயே எனது பாக்கியம்" என கூறினார்.
- பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சி தற்போது 92 நாட்களை எட்டியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6
இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 92 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் 6-வது சீசனின் கடைசி நாமினேஷன் புராசஸை மேற்கொள்ள சொல்கிறார் பிக்பாஸ். இதற்கு போட்டியாளர்கள் பல காரணங்களால் அசீமை நாமினேட் செய்கின்றனர். இறுதியாக அசீம் நாமினேட் செய்யும் பொழுது நான் இப்போது விக்ரமை நாமினேட் செய்ய போவது இல்லை. அவர் என்ன விட பொறுமையை இழந்தது கிடையாது என கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இவர் தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த 'கார்கி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

குடும்பத்தினருடன் சாய் பல்லவி
இவர் தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை சாய் பல்லவி கோத்தகிரியில் அமைந்துள்ள படுகர் இனத்தின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றுள்ளார். அங்கு, குடும்பத்தினருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
- இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
- இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்
சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

பதான் போஸ்டர்
இந்நிலையில், 'பதான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ஷாருக்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'பதான்' திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The mission is about to start... Aa raha hai #PathaanTrailer launching tomorrow at 11 AM!
— Shah Rukh Khan (@iamsrk) January 9, 2023
Hindi - https://t.co/sNPeRLR5p5
Telugu - https://t.co/istxh0xDhL
Tamil - https://t.co/rb9KKDB0Iw pic.twitter.com/P52XxVZT51
- இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'.
- இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஹனு மான்
இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'ஹனு-மான்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

ஹனு மான்
இந்நிலையில் 'ஹனு-மான்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘லாக்’.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் , சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்.
'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குனர் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

லாக் திரைப்படம் இசை வெளியீட்டு விழா
இந்நிகழ்ச்சியில் கே. பாக்யராஜ் பேசியதாவது, "படத்தின் இயக்குனர் ரத்தன் லிங்கா பேசும் போது பல்வேறு சிரமங்கள் இடைஞ்சல்களைக் சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும்.
எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டி விட்டு திருடப்போவார்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படி பல நாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும் போது இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் ஒன்றுமே கிடைக்காது போகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால் மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்த கல்லைத் தூக்கி கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான்.

லாக் திரைப்படம் இசை வெளியீட்டு விழா
அதே நேரத்தில் கண்வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார், தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே நான் கல்லை கோயிலைத்தாண்டித் தானே வீசினேன்? என்றான் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா ?என்றான். விநாயகர் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார் . அதுபோல இடையூறுகள் வருவது என்றாலும் எப்படியென்றாலும் வந்தே தீரும்.
இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால் . எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும் என்பார் பாட்டி. எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும்.
எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது .

லாக் திரைப்படம் இசை வெளியீட்டு விழா
நான் 'தூறல் நின்னு போச்சு' படத்தில் கம்பைச் சுற்றி பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கோபியில் 30 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு தான் அப்படி நடித்தேன் .அப்போது நான் ஒரு கையால் சுற்றி விளையாடுவது போல் இருக்கும் .இரண்டு கையாலும் சுற்றிப் பிடிப்பது போல் பயிற்சி பெற வேண்டும் என்று அழகிரிசாமி மாஸ்டரிடம் கேட்டேன்.அது முடியாது கஷ்டம் என்றார். அதன் நுட்பத்தைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன்.அவருக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் நான் கற்றுக் கொண்டதைப் படத்தில் வைத்தேன். மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொண்டு படத்தில் சுற்றி இருப்பேன். படத்தை பார்த்து எம்ஜிஆர் எத்தனை வருடமாக இதற்குப் பயிற்சி எடுத்தாய் என்று கேட்டார். நான் விசயத்தை சொன்னபோது அவர் நம்பவே இல்லை .பொய் சொல்லாதே என்றார்.அப்போது நான் சொன்னேன் மனது வைத்தால் எதுவும் முடியும் என்றேன்" என்று கூறினார்.
'லாக்' படக்குழுவினர் சார்பில் இந்த விழாவில் இயக்குனர் பாக்யராஜுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
- வாரிசு' திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாரிசுடு
இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு மொழி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தெலுங்கில் வரும் 14-ம் தேதி வாரசுடு திரைப்படம் வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கில் வாரிசுடு படம் தாமதமாக வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
- நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’.
- இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம்
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் படத்தின் டிரைலர் வருகிற ஜனவரி 9-ஆம் தேதி நண்பகல் 12.06 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாகுந்தலம் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.






