இணையத்தை கலக்கும் சமந்தா படத்தின் டிரைலர்

நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’.இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமந்தா
சமந்தா
Published on

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம்
சாகுந்தலம்

சாகுந்தலம்

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் படத்தின் டிரைலர் வருகிற ஜனவரி 9-ஆம் தேதி நண்பகல் 12.06 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாகுந்தலம் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com