என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடித்த வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியானது.
    • நள்ளிரவில் நடிகர் அஜித்தின் துணிவு படம் ரிலீசானது.

    சென்னை:

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் உலகம் முழுவதும் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியானது.

    இந்நிலையில், வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது.

    நள்ளிரவில் அஜித்தின் துணிவு ரிலீசான நிலையில், தற்போது விஜய்யின் வாரிசும் ரிலீசானதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் தியேட்டரில் வெளியானது.
    • இதை அஜித் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    சென்னை:

    அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் துணிவு. இதில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

    இந்நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் உலகம் முழுவதும் துணிவு படம் இன்று வெளியானது.

    தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியது. இதை அஜித் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பதான்".
    • இப்படத்தின் டிரைலரை விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    பதான்

    அதில், "மிக்க நன்றி நண்பா! இதனால்தான் நீங்க தளபதி.. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா.
    • இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளியது.

    இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.


    காந்தாரா

    இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இதை காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், காந்தாரா இரண்டு ஆஸ்கர் தகுதிகளைப் பெற்றுள்ளதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளது.



    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வாரிசு

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    விஜய் - தமன்

    அதில், "வாரிசு படத்தின் அனைத்து எமோஷனல் காட்சிகும் என் இதயத்திலிருந்து அழுதேன் அண்ணா. கண்ணீர் விலை மதிப்பற்றது. வாரிசு திரைப்படம் என் குடும்பம் அண்ணா, இது என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அண்ணா" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.
    • சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது.

    இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது.


    விவேக் அக்னிஹோத்ரி 

    இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்தின் பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் இந்தியத் திரைப்படமான 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் நான்கு இந்தியப் படங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்று பதிவிட்டுள்ளார்.


    விவேக் அக்னிஹோத்ரி 

    மேலும், பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் 'சிறந்த நடிகர்' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    • வாரிசு- துணிவு திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.


    வாரிசு - துணிவு

    இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


    துணிவு - வாரிசு

    அதாவது, ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    • பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார்.


    கனல் கண்ணன்

    இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


    கனல் கண்ணன்

    பின்னர் இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி 4 வாரங்களுக்கு காலை, மாலையில் இருவேளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • துணிவு, வாரிசு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.


    வாரிசு - துணிவு

    வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். துணிவு மற்றும் வாரிசு படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    துணிவு - வாரிசு

    இந்நிலையில், துணிவு, வாரிசு திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.


    வாரிசு - துணிவு

    மேலும், இரண்டு திரைப்படங்களும் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் வாரிசு படத்தை சட்ட விரோதமாக வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும் துணிவு படத்தை சட்ட விரோதமாக வெளியிட 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இரு படங்களையும் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
    • இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.


    பதான்

    இதையடுத்து 'பதான்' படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




    • எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • ‘துணிவு’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    துணிவு

    'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    எச்.வினோத்

    இதையடுத்து 'துணிவு' பட இயக்குனர் எச்.வினோத் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். துணிவு படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், துணிவு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம் ஆனால் அது முடியவில்லை என்றதும் டிசம்பரில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம் அதுவும் முடியவில்லை. இப்போது ரிலீஸ் வரைக்கும் இன்னும் ஒரு பத்து நாட்கள் இருந்தால் நன்றாக செய்திருக்கலாம் என்ற சூழ்நிலை தான் இருக்கிறது. ஆனால், ரீலீஸ் தேதி அறிவித்துவிட்டோம் செய்தே ஆக வேண்டும் இதை விட்டால் ஏப்ரல் மாதம் ரிலீஸ் தள்ளி போய்விடும் அது பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று தான் இப்போது ரிலீஸ் செய்கிறோம்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




    • நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெயிலர் 

    சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இதனிடையே, ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.


    மோகன் லால்

    இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நீண்ட நாட்களுக்கு பிறகு என் அருமை நண்பர் மரியாதைக்குரிய சந்திரபாபு நாயுடுவுடன் மறக்கமுடியாத நேரத்தை கழித்தேன். அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கவும் அரசியல் வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.



    ×