என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    ரன் பேபி ரன்

    ரன் பேபி ரன்


    இந்நிலையில் இந்த படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மற்றும் லவிதா எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரன் பேபி ரன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘கிக்’.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    கிக் 

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதை சந்தானம் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.


    கிக் போஸ்டர்

    இந்நிலையில், 'கிக்' படத்தின் புதிய அப்டேட் நாளை மாலை 6.3 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    • வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் 'வாரிசு'.
    • 'வாரிசு'படக்குழு வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வம்சி - விஜய்

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் 'வாரிசு' படக்குழு சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'வாரிசு கொண்டாட்டங்கள் ஆரம்பம்' என்று பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.


    • ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்.

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ஆர்.ஆர்.ஆர்.

    இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும் இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப் விருதை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.



    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் தற்போது ‘வாழை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


    மாரி செல்வராஜ்

    இதையடுத்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வாழை'. இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


    வாழை படப்பிடிப்பு

    இந்நிலையில், 'வாழை' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "முதற்கட்ட படபிடிப்பு நிறைவடைந்தது- உறுதுணையாய் நின்ற அனைத்துஉள்ளங்களுக்கும் நன்றியும் ப்ரியமும்" என்று பதிவிட்டுள்ளார்.


    வாழை படப்பிடிப்பு

    'வாழை' திரைப்படம் மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். எனவே வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.



    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ஆர்.ஆர்.ஆர்

    இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மிகச் சிறப்பான சாதனை. இசையமைப்பாளர் கீரவாணி, பாடகர்கள் ராகுல் சீப்லிகஞ்ச், காலா பைரவா, பிரேம் ரக்சித், ராஜமெளலி, ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆா் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியுள்ளது " என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை எட்டியுள்ளது.
    • தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 94 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல், ஜி.பி.முத்து, சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    உள்ளே வந்த ஜி.பி. முத்துவிடம்,"திரும்ப அனுப்பும்போது தான் போகணும்" என்கிறார் பிக்பாஸ். அதற்கு நீங்க போக சொன்னாலும் போக மாட்டேன். வெளியே அவ்வளவு பாடு பட்டுட்டேன் என ஜி.பி.முத்து கூறுகிறார். தொடர்ந்து கார்டன் பகுதியில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, சாந்தி "எல்லோருக்கும் காபி போடட்டுமா?" என கேட்கிறார். இதற்கு ஜி.பி. முத்து காபி போடுங்க. உப்புமா பக்கம் போய்டாதீங்க என கலாய்க்கிறார். இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் இன்று வெளியானது.
    • இப்படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்த்து மகிழ்ந்தார்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக இன்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.


    துணிவு - வாரிசு

    இதையடுத்து சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களுடன் வாரிசு படத்தைப் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படம் குறித்து கூறியதாவது, "வாரிசு படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்தேன். இதன் பிறகு அப்டேட்கள் வரும்" எனக் கூறினார்.


    லோகேஷ் கனகராஜ்

    இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    எம்.எம்.கீரவாணி

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'ஆர்.ஆர்.ஆர்.' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்று தந்திருக்கிறார் எம்.எம்.கீரவாணி. முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



    • போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர்.
    • பாதுகாப்புக்கு நின்ற கோட்டை போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று (புதன் கிழமை) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் 6 தியேட்டர்களில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த திரையரங்குகள் முன்பு இரவு 11 மணி முதல் ரசிகர்கள் திரள தொடங்கினர். திருச்சி மாரிஸ் பாலம் அருகாமையில் உள்ள தியேட்டரிலும் துணிவு திரைப்படம் நள்ளிரவு திரையிடப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அங்கு குவிந்தனர்.

    பின்னர் அவர்கள் படம் திரையிடுவதற்கு முன்பாக நள்ளிரவு 12.30 மணி அளவில் போக்குவரத்துக்கு இடையூறாக மாரிஸ் பாலத்தில் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் ஒரு ஆட்டோவின் மீது ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏறி நின்று ஆட்டம் போட்டனர். இதில் அந்த ஆட்டோ சேதம் அடைந்தது. இதற்கிடையே அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    சாலையின் இரு பக்கங்களிலும் பாலத்தில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நின்றது. அதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்ற கோட்டை போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். இருந்தபோதிலும் வாண வேடிக்கைகளை நாலாபுறமும் திருப்பி விட்டு வெடிக்க செய்ததாக கூறப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். போலீசாரின் அதிரடியால் ரசிகர்கள் அங்கும் இங்குமாக சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் திட்டமிட்டபடி நள்ளிரவு காட்சி அந்த தியேட்டரில் திரையிடப் பட்டது. இந்த போலீஸ் தடியடியில் பத்துக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்.

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.


    எம். எம். கீரவாணி

    இதையடுத்து 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்தது. இந்நிலையில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.

    • விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் இன்று தியேட்டர்களில் வெளியானது.
    • இதற்காக ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர்களில் குவித்து உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி இன்று அதிகாலை தியேட்டர்களில் வெளியானது. இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது.

     


    தியேட்டர்கள் முன்பு அசம்பாவிதங்களை தடுக்க நேற்று இரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு திரைப்படங்களையும் பார்க்க நேற்று இரவு முதல் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர். இதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.



    துணிவு மற்றும் வாரிசு படங்கள் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 70 தியேட்டர்களில் 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இன்று திரையிடப்பட்டன. துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் தியேட்டர்களில் ரிலீசானது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.



    இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் முண்டி அடித்தபடி நுழைந்தனர். அப்போது கூட்ட நெரிசலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தன. மேலும் 2 ரசிகர்கள் கேட்டின் மீது இருந்து கீழே குதித்ததில் கண்ணாடிகள் குத்தி ரத்த காயமடைந்தனர். இது தவிர மற்றொரு ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கி காலில் பலத்த காயம் அடைந்தார். மேலும் அதிவேகத்தில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியபடி மோட்டார் சைக்கிளில் சென்ற சிலரை கைது செய்த போலீசார் அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

    ×