என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தை இயக்கி வருகிறார்.
    • இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, " ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சந்தோஷமாக படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் என் கருத்து" என்று கூறினார்.

    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘கிக்’.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    கிக்

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதை சந்தானம் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.


    கிக்

    'கிக்' படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
    • இதைத்தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கிறார்.

    விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "வாரிசு திரைப்படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக தான் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தோம். இப்போது வாரிசு படம் ரிலீஸாகிவிட்டது. இன்னும் ஒரு பத்து நாட்களில் அப்டேட் எதிர்பார்க்கலாம். இனி தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகும்" என கூறினார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.


    ஜிகர்தண்டா -2

    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் ஜிகர்தண்டா- 2 படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.



    ஜிகர்தண்டா -2

    இந்நிலையில், ஜிகர்தண்டா- 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 95 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில் இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 95 நாட்களை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், இந்த வீட்டில் நீங்கயெல்லாம் ஏன் பெஸ்ட் என்று இன்னொருத்தரை எடுத்து சொல்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கதிர் கூறுகிறார். இதற்கு ஏடி.கே., மைனா மாதிரி ஒரு பாசிடிவ் மனிதரை பார்ப்பது ரொம்ப கஷ்டம் என்று கூறுகிறார். இதன்பின் பேசிய விக்ரமன், அசீம் சில நேரங்களில் காட்டும் அன்பு அவரது பேச்சு திறமை எந்த இடத்திலும் சோர்ந்து விடாமல் 14 வாரங்கள் கடுமையான விமர்சனங்களை அவர் சுமந்து தான் வந்திருக்கிறார். இதற்கு பெரிய துணிச்சல் வேண்டும் என்று கூறுகிறார். அடுத்து பேசிய அசீம், கோபம் வந்து எந்த விதத்திலும் பாதித்துவிட கூடாது என்பதற்கு மிகப் பெரிய உதாரணமாக விக்ரமனை பார்க்கிறேன் என்று கூறினார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை பெற்று கொண்டவர் ஐஸ்வர்யா லட்சும்.
    • இவர் சமீபத்தில் நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.


    ஐஸ்வர்யா லட்சுமி

    'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து இவர் நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் 'இதய' குறியீடுடன் பகிர்ந்துள்ளார்.


    அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி

    இதற்கு இருவரின் ரசிகர்களும் 'காதலுக்கு வாழ்த்துக்கள்' என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் பலரும் இது அடுத்த படத்திற்கான அறிவிப்பா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இது நட்பா? இல்லை காதலா? என்று இரு தரப்பிலும் எந்த வித கருத்தும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    • துணிவு - வாரிசு திரைப்படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
    • ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.


    வாரிசு -துணிவு

    இதைத்தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதற்கும் தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.


    துணிவு - வாரிசு

    இந்நிலையில், தற்போது திரையரங்க அதிபர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18-ம் தேதிகளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 14-ம் தேதி முதல் 17 -ம் தேதி வரையி்ல் திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது.
    • இப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியானதால் ரசிகர்கள், திரையுலகினர், சினிமா விமர்சகர்கள் என பலரின் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் மேள தாளம் முழங்க, கட் அவுட் வைத்து மாலை அணிவித்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு


    இந்நிலையில் வாரிசு-துணிவு திரைப்படங்களின் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான முதல் நாளில் தலா ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

    • இயக்குனர் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தில் நடிகை காஷ்மிரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.


    ஹிப்ஹாப் ஆதி

    தொடர்ந்து இவர் நடித்துள்ள வீரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஹிப்ஹாப் ஆதி 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் காஷ்மிரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பி.டி.சார் போஸ்டர்

    ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'பி.டி.சார்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • அஜித்திற்கு 9.144 மீட்டர் உயர கட் அவுட் மலேசிய சாதனை புத்தகத்தில் இடப்பிடித்தது.

    நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு மலேசியாவில் அஜித்திற்கு 9.144 மீட்டர் உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடிகர் ஒருவருக்காக வைக்கப்பட்ட மிக உயரமான கட் அவுட் இது என கூறப்படுகிறது.

     


    துணிவு படத்தின் முதல் காட்சி நேற்று காலை 8.30 மணிக்கு மலேசியாவில் உள்ள பிஜே எல்எப்எஸ் ஸ்டேட் சினிபிளக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய நிலையில், திரையரங்கு முன் வைக்கப்பட்ட அஜித்தின் 30 அடி உயர கட் அவுட் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான அங்கீகார சான்றிதழ் திரைப்பட விநியோகஸ்தரிடம் வழங்கப்பட்டது. துணிவு படத்தின் மலேசியா உரிமத்தை அங்குள்ள பிரபல முன்னணி நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் கைப்பற்றியுள்ளது. ரசிகர்களின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்ற திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.

     

    லிங்குசாமி

    லிங்குசாமி

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் துணிவு படத்தை ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கிய லிங்குசாமி பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், துணிவு திரைப்படம் அஜித் சாரின் மங்காத்தா மற்றும் வினோத்தின் சதுரங்கவேட்டையின் கலவையாகும். அது இறுக்கமாகவும் திடமாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் போனிகபூர் சார் மற்றும் படக்குழுவினருக்கு. இந்த பொங்கலுக்கு மாபெரும் வெற்றியடைகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த்.
    • இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த். இவர் அரசியல், நடனம், மாடல் அழகி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். தற்போது 44 வயதாகும் ராக்கி சாவந்த் கடந்த 2019-ம் ஆண்டு ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2022-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

     

    ராக்கி சாவந்த் - ஆதில் கான்

    ராக்கி சாவந்த் - ஆதில் கான்


    ரிதீஷ் சிங்கை விவாகரத்து செய்த ராக்கி சாவந்த், மைசூருவைச் சேர்ந்த ஆதில் என்பவருடன் பழகி வந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் நடந்ததாகவும், தங்களது திருமணத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    ×