மிகப்பெரும் உதாரணமாக அவரை நான் பார்க்கிறேன்.. விக்ரமனுக்கு அசீம் புகழாரம்..

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 95 நாட்களை நெருங்கியுள்ளது.இதில் இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6
Published on

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6

இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 95 நாட்களை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6

இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், இந்த வீட்டில் நீங்கயெல்லாம் ஏன் பெஸ்ட் என்று இன்னொருத்தரை எடுத்து சொல்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கதிர் கூறுகிறார். இதற்கு ஏடி.கே., மைனா மாதிரி ஒரு பாசிடிவ் மனிதரை பார்ப்பது ரொம்ப கஷ்டம் என்று கூறுகிறார். இதன்பின் பேசிய விக்ரமன், அசீம் சில நேரங்களில் காட்டும் அன்பு அவரது பேச்சு திறமை எந்த இடத்திலும் சோர்ந்து விடாமல் 14 வாரங்கள் கடுமையான விமர்சனங்களை அவர் சுமந்து தான் வந்திருக்கிறார். இதற்கு பெரிய துணிச்சல் வேண்டும் என்று கூறுகிறார். அடுத்து பேசிய அசீம், கோபம் வந்து எந்த விதத்திலும் பாதித்துவிட கூடாது என்பதற்கு மிகப் பெரிய உதாரணமாக விக்ரமனை பார்க்கிறேன் என்று கூறினார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com