துணிவு- வாரிசு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது.இப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
துணிவு - வாரிசு
துணிவு - வாரிசு
Published on

விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியானதால் ரசிகர்கள், திரையுலகினர், சினிமா விமர்சகர்கள் என பலரின் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் மேள தாளம் முழங்க, கட் அவுட் வைத்து மாலை அணிவித்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

வாரிசு - துணிவு
வாரிசு - துணிவு

வாரிசு - துணிவு

இந்நிலையில் வாரிசு-துணிவு திரைப்படங்களின் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான முதல் நாளில் தலா ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com