என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.
    • இப்படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    துணிவு போஸ்டர்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'துணிவு' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அஜித்தின் புகைப்படத்துடன் 'தி ரியல் வின்னர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள் இது 'துணிவு' பொங்கல் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    எச்.வினோத்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'துணிவு' படத்தின் இயக்குனர் எச். வினோத் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்‘கள்வன்’.
    • இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    கள்வன்

    ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை 4.44 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    கள்வன்

    அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.



    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    அஜித் - மஞ்சுவாரியர்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை மஞ்சுவாரியர், அஜித்துடனான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து 'நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 96 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில், வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 96 நாட்களை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், மகேஷ்வரி வீட்டிற்குள் வருகிறார். அப்போது கவுஸ் மேட்ஸ் அனைவரும் கலந்து பேசி ஒரு சாக்ரிஃபைஸ் டாஸ்க் விளையாட வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதற்கு தனலட்சுமி விக்ரமனுக்கு ஒரு பகுதி தாடியை எடுத்து விட வேண்டும் அசீம் அண்ணா சாரி அல்லது சுடிதார் இந்த இரண்டு உடைகளில் எதாவது ஒன்றை அணிய வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு அசீம் இது வந்து கீழ போனும் என்பது போல் இருக்கிறது என்று சொல்கிறார். இதற்கு மகேஷ்வரி சாரி அல்லது சுடிதார் அணிந்தால் கீழ போனும் அப்படீனு அர்த்தம் இல்லை என்று கூறுகிறார். வந்ததுமே உங்க வேலையை ஆரம்பிக்காதீங்க என்று மகேஷ்வரியை அசீம் கத்துகிறார். இதற்கு மகேஷ்வரி நான் பெருக்கு, தொடைக்கதுக்குலாம் வரல இதுக்கு தான் வந்துருகேன் என்று சொல்கிறார். அதற்கு அசீம் அதுக்கு தான் நீங்க வெளியவும் போனீங்க பேசாம உட்காருங்க என்று சொல்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. எப்படியோ பிக்பாஸ் வீட்டில் ஒரு கலவரம் உருவாக போவது உறுதி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    • தனுஷ் இயக்கத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பவர் பாண்டி'.
    • இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ் பாடகர், தயரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் அசத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'பவர் பாண்டி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவர் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியானது. தனுஷ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் நடிப்பவர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.


    தனுஷ்

    இந்நிலையில், இவர் இயக்கும் படத்தின் தலைப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'ராயன்' என தனுஷ் தலைப்பு வைத்துள்ளதாகவும் வட சென்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகிறது.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    துணிவு

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் டான்ஸ் மூவ்ஸ் பற்றி இயக்குனர் எச். வினோத் கூறியதாவது, "துணிவு படத்தின் முதல் பாதியில் வரும் சில நடனங்கள் அஜித் சாரே ஆடியது. பெரிய ஆங்கில் எதுவும் பார்க்கவில்லை. கேமராவை வைத்து விட்டு நீங்க ஆடுங்க சார் என்று விட்டு விட்டோம். மைக்கேல் ஜாக்சன் மூன் வாக் 'moonwalk' நடனத்தை நானும் கல்யாண் சாரும் கேட்காமலே அஜித் சார் அவராகவே ஆசைப்பட்டு ஆடினார். அந்த கதைக்கு சரியாக தேவைப்பட்டது. அதை அஜித் சார் ஈசியாக செய்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வாரிசு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் நேற்று முன்தினம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    வாரசுடு போஸ்டர்

    இந்நிலையில், 'வாரசுடு' திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • எச் வினோத் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    விக்னேஷ் சிவன் பதிவு

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் 'துணிவு' திரைப்படத்தை பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "திரையில் கிங்கை பார்ப்பது ரசிப்பது அலாதியானது. அனைத்து விதத்திலும் 'துணிவு' திரைப்படம் பிளாக் பஸ்டர். எச்.வினோத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, தசரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.


    தசரா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தசரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் நானி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.



    • வேங்கை வயல் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • டீக்கடையில் இரட்டைக்குவளை முறை பயன்பாட்டில் இருந்தை பார்த்து அந்த கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை இருப்பதை கலெக்டர் உறுதி செய்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு கடந்த 27-ந்தேதி அந்த கிராமத்தில் ஆய்வு செய்தார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த மக்களை அங்குள்ள அய்யனார் கோவிலில் வழிபட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பின்னர் அவர்களை கலெக்டர் கவிதா ராமு கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார்.

    அப்போது அதனை விமர்சித்து சாமியாடியவாறு சிங்கம்மாள் என்ற பெண் அவதூறாக பேசினார். இதே போல் அங்குள்ள டீக்கடையில் இரட்டைக்குவளை முறை பயன்பாட்டில் இருந்தை பார்த்து அந்த கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை இருப்பதை கலெக்டர் உறுதி செய்தார்.

    இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் மற்றும் டீக்கடை உரிமையாளர் மூக்கையா ஆகியோர் சாதிய பாகுபாடு காட்டியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினர். அதனை நீதிபதி சத்தியா தள்ளுபடி செய்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது போன்ற சாதிய கொடுமைகளில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!

    தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!! "என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 



    • அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்‘கள்வன்’.
    • இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    சூர்யா

    ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கள்வன்' திரைப்படத்தின் டீசரை நாளை மாலை 4.44 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுவார் என ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    ×